Tuesday 9 June 2015

பாக்ஸ்கான் ஆலையை மூட அனுமதிக்கக் கூடாது - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.

சென்னை அருகே உள்ள பாக்ஸ்கான் ஆலையை மூடுவது தொடர்பாக தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும்பாக்ஸ்கான்தொழிற் சாலை ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வருகிறது. அண்மையில்பாக்ஸ்கான்தொழிற்சாலை மூடப்படுவதாக அறிவிக்கப் பட்டிருந்தது. இது ஊழியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைக் கண்டித்து சிஐடியு சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப் பட்டன.இந்நிலையில் ஊழியர்கள் உதயகுமார் உள்ளிட்ட 5 பேர் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த வழக்கில்,‘ இந்த தொழிற்சாலையில், நிரந்தரமாகவும், ஒப்பந்த முறையிலும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வந்தனர்.இதில் ஏற்கனவே, 6,400 பணியாளர்கள் வேலையை இழந்துள்ள நிலையில் 1,306 பேர் வேலை பார்த்து வந்ததாக தெரிவித்துள்ளார். தொழிற்சாலையை மூடுவது தொடர்பாக எந்த நடைமுறையும் பின் பற்றவில்லை என்றும், இதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டிருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கர்ணன், ‘பாக்ஸ்கான் தொழிற்சாலை மூடு வது தொடர்பாக தமிழக அரசு அனுமதி அளிக்கக்கூடாதுஎன்றும் இயந்திரங்களை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யக்கூடாது என்றும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கின் விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

No comments: