Friday, 12 June 2015

ஜூன்-12 குழந்தைகள் மூலம்-வருமானம், வீட்டுக்கு அவமானம்

குழந்தைத் தொழிலாளர்களை குறைப்பதில் பெரும்பாலும் மந்த நிலையே நீடிப்பதால், குழந்தைத் தொழிலாளர்களை முற்றிலும் ஒழிக்க ஒரு நூற்றாண்டுக்கும் மேல் ஆகலாம் என்று குழந்தைகள் நல உரிமை இயக்கம் என்ற தொண்டு நிறுவனத்தின் அறிக்கை ஒன்று கூறுகிறது. குழந்தைத்   தொழிலாளர்கள் எண்ணிக்கை குறையும் விகிதம் ஆண்டுக்கு 2.2% மட்டுமே என்று கூறும் இந்த தொண்டு நிறுவனம், கூறப்படும் அளவுக்குகுழந்தைத்தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைக்கப்படுவதில்லை என்று கூறியுள்ளது.  இந்தியாவில் இன்னும் ஒரு கோடிக்கும் மேலான குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளனர். 
நகர்ப்புறங்களில் பெருகும் குழந்தைத் தொழிலாளர்கள் எண்ணிக்கை:

2001-2011-ம் ஆண்டுகளிடையே நகர்ப்புற குழந்தைத் தொழிலாளர்கள் எண்ணிக்கை 53% அதிகரித்துள்ளதாக அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரம் ஒன்றை இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.இது குறித்து ஆய்வு மேற்கொண்டநீங்களும், குழந்தைகள் உரிமைகளும்என்ற அரசு சாரா தொண்டு நிறுவனத்தின் கொள்கை மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் கோமல் கனோத்ரா கூறும்போது, “குழந்தைத் தொழிலாளர்களைத் தடுக்கும் எந்திரம் நகர்ப்புறத் தில்தான் பெரிதும் இயங்குகிறது, அப்படியிருந்தும் நகர்ப்புறங்களில் 53% அதிகரித்துள்ளது என்பது கவலை யளிக்கக் கூடியதாகும். கிராமங்களிலிருந்து பிழைப்பு தேடி நகரங்களுக்கு வரும் மக்கள் தொகையிலிருந்துதான் இந்தகுழந்தைத் தொழிலாளர்கள் உருவாகின்றனர்,சில நேரங்களில்ஆட்கடத்தலுக்கும் ஆட்படுகின்றனர்என்றார்.

வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தப்படும் முக்கால்வாசி குழந்தைத் தொழிலாளர்கள்
கிராமப்புறங்களில் பணியில் ஈடுபடுத்தப்படும் சிறார்கள் 4 பேரில் 3 பேர் வேளாண் பணிகளில் அல்லது வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்இந்தியாவில் குழந்தைத்தொழிலாளர்கள் எண்ணிக்கையில் பாதி பிஹார், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்தியபிரதேசம், மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இந்த மாநிலங்களில் மட்டும் சுமார் 55 லட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளனர்.மேலும், இந்த 5 மாநிலங்களில் உத்தரப்பிரதேசத்தில் குழந்தைத் தொழிலாளர் எண்ணிக்கை 13% அதிகரிக்கவே செய்துள்ளது. அதாவது 5-ல் 1 குழந்தைத் தொழிலாளர் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: