அரசியல் கட்சிகளில் ஒன்மேன் ஷோ நடப்பதை எதிர்ப்பதாக பாஜக மூத்தத் தலைவர் அத்வானி கூறியுள்ளார்.
இந்தியாவில் மீண்டும் நெருக்கடி நிலை வராமல் இருக்காது என்று நம்புவதற்கில்லை என சமீபத்தில் கருத்து வெளியிட்டிருந்த அத்வானி, தற்போது மீண்டும் அதிரடியாகக் குறிப்பிட்டுள்ளார்.
பிரபல தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அத்வானி, "கர்வம் என்பது அனைத்து அதிகாரங்களையும் தன்னகத்தே அடக்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துக்கு காரணமாக அமைந்து விடுகின்றது. அரசியல் கட்சிகளில் இதைப்போன்ற 'ஒன் மேன் ஷோ’ மேலோங்குவதை நான் எப்போதுமே எதிர்த்து வந்திருக்கிறேன். வாஜ்பாயைப் போல் இருக்க இன்றைய தலைவர்கள் முன்வர வேண்டும்.
இந்தியாவில் வெற்றிகரமான பல சாதனைகளை செய்த உயர்ந்த தலைவராக வாஜ்பாய் திகழ்ந்த காலத்தில்கூட வாஜ்பாய்தான் இந்தியா, இந்தியாதான் வாஜ்பாய் என்று யாரும் கூறி நான் கேள்விப்பட்டதில்லை. அதிகாரம் நிறைந்த பதவிக்கு வரும் யாரும் அந்தப் பதவியை இழக்க விரும்புவதில்லை. ஆனால், அந்த அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு வாக்காளர்கள் தகுந்த பாடத்தைக் கற்பிப்பார்கள்" என்று கூறியுள்ளார்.

1 comment:
நல்லது நடக்கட்டும்
Post a Comment