Wednesday, 20 November 2013

செய்தி . . . துளிகள் . . .


மத்திய அரசு  இனி BSNL மற்றும்  MTNL தொடர்புகளையே பயன்படுத்த வேண்டும் --மத்திய அரசு முடிவு

 செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தொலைதொடர்பு துறை செய்தி தொடர்பாளர் இனி மத்திய அரசு அலுவலங்களில் BSNL மற்றும்  MTNL லேண்டலைன் பிராட்பேண்டுகளை பயன்படுத்த வேண்டுமெனஅரசு  முடிவு செய்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்களான BSNL மற்றும்  MTNL நிறுவனங்களை  சரிவிலிருந்து மீட்கவே இந்த முடிவு என்றார். இதற்கான அமைச்சரவை முடிவு கூடிய சீக்கிரம் வெளியிடப்படும். இதுவரை மத்திய அரசு நிறுவனங்கள் மற்ற தனியார் AIRTEL & VODAFONE  இணைப்புகளை பயன்படுத்திக் கொண்டிருந்தால் அவை உடனடியாக சரண்டர் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.  இதே போல மாநில அரசும் செயல்படுத்தும் என எதிர்பார்ப்பதாக அந்த அதிகார் கூறினார் . BSNL மற்றும்  MTNL- மேம்படுத்த அமைச்சர்கள்குழு அமைக்கப்பட்டிருப்பது  அனைவரும் அறிவோம். அதன் தலைவராக மத்திய அரசின் நிதி அமைச்சர் .சிதம்பரம் இருக்கிறார். அவரின் கவனத்திற்கும் இந்த முடிவு கொண்டு செல்லப்படும்.
7 வது அனைத்திந்திய மாநாடு       நமது BSNL ஊழியர் சங்கத்தின்        7வதுஅனைத்திந்திய மாநாடு எதிர் வரும் நவம்பர் 2014-லில் கொல்கத்தா நகரில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளதாக நமது மத்திய சங்கம் தெரிவித்துள்ளது. மேற்கு வங்க மாநிலம்,கொல்கத்தா டெலிபோன்ஸ்,டெலிகாம் பாக்டரி மற்றும் டெலிகாம் ஸ்டோர் ஆகிய மாநிலங்கள் இணைந்து அனைத்திந்திய மாநாட்டை நடத்தும் . 
TTA ஆளெடுப்பு விதி
கார்போரட் நிர்வாகம் டெலிகாம் டெக்னிசியன்களுக்கான ஆளெடுப்பு விதிகளுக்கான வரைவை வெளியிட்டு உள்ளது . 
மகளிர் பயிலரங்கம்-
கோவையில் 08-12-2013 அன்று நடைபெறுவதாக இருந்த மகளிர் பயிலரங்கம்-14.12.2013 தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

No comments: