Friday 22 November 2013

தோழமை பூர்வமான வரவேற்பு நிகழ்ச்சி . . .

பொதுத்துறை - சிறுவணிகம் - மக்கள் நலன் காப்போம் !
அருமைத் தோழர்களே! இந்திய மக்களின் இதயத்தில் நீங்காத இடம் பெற்ற இன்சூரன்ஸ் நிறுவனமாய் எல்.ஐ .சி  மற்றும் அரசு பொது இன்சூரன்ஸ் கம்பெனிகள்... பாலிசிதாரர்களுக்கு சொன்ன வார்த்தையைக் காப்பாற்றுவதில் உலகிலேயே முதல் இடம் ... எல்.ஐ.சி .யில் கிட்டத்தட்ட 100 சதவீத உரிமப்பட்டுவாட ...என்பதில் தொடர்ந்து சாதனை படைத்து வரும் LIC நிறுவனத்தில் முதன்மை சங்கமாக சிறப்பாக செயலாற்றி வரும் AIIEA அகில இந்திய இன்சுரன்ஸ் ஊழியர்கள் சங்கத்தின் ஒரு பகுதியான தென்மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்கத்தின் மாநாடு எதிர்வரும் 24,25 மற்றும் 26 தேதிகளில் கோவையில் நடைபெறுவதை ஒட்டி நெல்லையில் இருந்து கோவை வரை செல்லும் பிரச்சார பயணக்குழுவை மதுரையில் 21.11.2013 வியாழன் மாலை 5 மணிக்கு நெல்பேட்டையில் மதுரை நகர தொழிற் சங்கங்கள் சார்பாக நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் நமது BSNLEU மாவட்ட சங்கத்தின் சார்பாக கலந்து கொண்டு கதராடை போர்த்தி வாழ்த்துரை வழங்கினோம்.
 இந் நிகழ்ச்சிக்கு நமது அமைப்பிலிருந்து தோழர்கள் சத்தியராஜ், சூரியன்,வெங்கடேசன், மானுவேல் பால்ராஜ்,நெடுஞ்செழியன், பாண்டி,சிக்கந்தர்,சோணை முத்து உமா தியாகராஜன், சரவணன், முத்துப்பாண்டி,கோபால், கிருஷ்ணமூர்த்தி,சுதாகர்,வள்ளி,ஷன்முகதாய், மற்றும் CITU,TNGEA,MUTA,ICEU,BEFI,TANTSAC போன்ற சங்கங்களும் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.இந்நிகழ்ச்சியில்  தப்பாட்டம்,ஒயிலாட்டம் போன்ற கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
        மத்திய அரசே! மக்களுக்கான  பொருளாதாரப் பாதை இல்லாமல் காப்பாற்ற முடியாது தேசத்தை...கீழே போடு அந்நிய முதலீட்டிற்கு வீசுகிற கவரியை....கீழே போடுசிறுவனிகத்தையும்,பொதுத்துறையையும் காயப்படுத்துகிற கத்தியை... கட்டுப்படுத்து விலைவாசியை... பலப்படுத்து ரேசன் விநியோகத்தை...பொதுமக்களே!நாடி வருகிறோம் உங்கள் ஆதரவை... கரம் நீட்டுங்கள் ... விரல் கோர்ப்போம் ! தேச நலன் காப்போம் ! 
வாழ்த்து போஸ்டரில் நகர தொழிற்சங்கத்துடன் நமது BSNLEU

வாழ்த்துரையில் நமது மாவட்ட செயலர் தோழர்.எஸ்.சூரியன்  

தோழமை பங்கேற்பில்  நமது மாநில அமைப்பு செயலர் தோழர்.செல்வின் சத்தியராஜ் 
 

No comments: