கெயில் எரிவாயுக் குழாய் பதிக்கும் திட்டம் : தமிழக அரசின் உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் தடை - மாற்று வழியில் அமல்படுத்துக
கொச்சியிலிருந்து
மங்களூருக்கு
எரிவாயு
கொண்டு
செல்ல
தமிழகத்தில்
கோயம்புத்தூர்,
திருப்பூர்,
சேலம்,
ஈரோடு,
நாமக்கல்,
தர்மபுரி
மற்றும்
கிருஷ்ணகிரி
ஆகிய
மாவட்டங்கள்
வழியாக
300 கிலோ
மீட்டர்
தூரம்
விவசாய
நிலங்களில்
மற்றும்
குடியிருப்பு
பகுதிகளில்
குழாய்கள்
பதிக்கப்படுவதற்கான
வேலைகள்
துவங்கின.
இதை
எதிர்த்து
விவசாயிகள்,
விவசாய
அமைப்புகள்
மற்றும்
அரசியல்
கட்சிகள்
போராடின.
இதையடுத்து,
தமிழக
அரசு
பொதுமக்களிடம்
கருத்து
கேட்பு
கூட்டம்
நடத்தியது.
இதனடிப்படையில்,
தமிழக
அரசு
விவசாய
நிலங்களில்
பதித்துள்ள
குழாய்களை
அகற்ற
வேண்டுமென்றும்,
தேசிய
நெடுஞ்சாலை
வழியாக
விவசாயத்திற்கு
பாதிப்பு
இல்லாமல்
குழாய்களை
பதிக்கலாம்
என்றும்
அறிவிக்கை
வெளியிட்டது.
திட்டங்கள்
மக்களுக்காக
இருக்க
வேண்டுமேயன்றி,
திட்டங்களுக்காக
மக்களின்
நலன்
பாதிக்கப்படுவது
கூடாது
என்று
மாநில
அரசாங்கம்
அறிவித்தது.இதை எதிர்த்து, கெயில் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசின் இந்த அறிவிக்கையை சென்னை உயர்நீதிமன்றம்
ரத்து
செய்துள்ளது.
பல
ஆயிரக்கணக்கான
விவசாயிகளின்
நலன்களை
பாதிக்கக்கூடிய
இந்தத்
தீர்ப்பை
எதிர்த்து
தமிழக
அரசாங்கம்
மேல்முறையீடு
செய்ய
வேண்டுமென்று
மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட்
கட்சியின்
மாநில
செயற்குழு
வலியுறுத்துகிறது.
மேலும்,
மத்திய
அரசு
தமிழக
அரசு
வெளியிட்ட
அறிவிக்கையின்
அடிப்படையில்
மாற்றுவழியில்
இத்திட்டத்தை
நிறைவேற்ற
முன்வர
வேண்டு
மென்று
வலியுறுத்துகிறது.
No comments:
Post a Comment