Tuesday 19 November 2013

சோனியாவிற்கு சிவராஜ் சிங் சவுகான் வக்கீல் நோட்டீஸ்...


ரூ. 10 கோடி இழப்பு கேட்டு சோனியா மீது அவதூறு வழக்கு!
10 கோடி ரூபாய் இழப்பு கேட்டு காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு எதிராக மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்மத்திய பிரதேச சட்டசபைக்கு வரும் 25 ஆம் தேதியன்று தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கடந்த வாரம் அங்கு சோனியா காந்தி கலந்து கொண்ட கூட்டம் நடந்தது. இதற்காக நாளிதழ்களில் முழு பக்க விளம்பரம் கொடுக்கப்பட்டு இருந்தது.அதில் முதல்வர் சவுகான் வீட்டில் பணம் எண்ணும் எந்திரம் இருப்பது போலவும், காண்டிராக்ட் பணிகளுக்கு அவரும், அவர் மனைவி சத்னாவும் பணம் வாங்கி குவிப்பது போலவும் எழுதப்பட்டிருந்தது
சோனியாகாந்தியும்அந்த கூட்டத்தில்பேசும்போது,அந்தவிளம்பரத்தில்இருப்பதுபோன்றேபேசினார்.இந்நிலையில், இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானும், அவரது மனைவியும் இது தொடர்பாக சோனியா காந்திக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.அதில்,"அவர்கள் நீங்கள் (சோனியா) கொடுத்த விளம்பரத்தால் என் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. 15 நாட்களுக்குள் அதற்கு நீங்கள் மறுப்பு தெரிவிக்க வேண்டும்.இல்லையெனில் உங்கள் மீது ரூ.10 கோடி கேட்டு வழக்கு தொடரப்படும்" என்று  கூறியுள்ளனர்.

No comments: