Wednesday, 6 November 2013

நவம்பர் - 7 புரட்சி தின நல் வாழ்த்துக்கள் . . .

உலகைக் குலுக்கிய நவம்பர் புரட்சி நடந்தேறிய நாள் இன்று. உலகில் முதன் முதலாய் மனிதனை மனிதன் சுரண்டாத சோசலிச அமைப்பை அமைப்பதற்கு கால்கோள் நடத்திய நாள் இன்று.
இரண்டாம் உலகப்போரின்போது இரண்டு கோடி மக்களை களப்பலி ஆக்கி பாசிச பேரபாயத்திலிருந்து பூவுலகை காத்தது சோவியத் யூனியன். இன்றைக்கு இந்தியாவில் மதவெறி பாசிச சக்திகள் தலையெடுக்க முயல்கின்றன. பாசிச சக்திகளை முற்றாக முறியடித்து, எல்லோரும் எல்லாமும் பெறுகிற சோசலிச சமுதாயத்தை அமைத்திட இந்நாளில் சூளுரைப்போம்கடந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சாதனையாகவே நவம்பர் புரட்சி திகழ்கிறது. சோவியத் பின்னடைவு ஏற்பட்டு இருபது ஆண்டுகளுக்குப்பிறகு இன்றைய உலக நிகழ்வுக்ள் அதை உண்மை என்று நிரூபித்து வருகின்றன. முதலாளித்துவத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியும் அதிலிருந்து மீள உலகத்திலுள்ள உழைப்பாளிமக்களின் மீது தனது சுமையை சுமத்த முதலாளித்துவம் முயற்சி செய்வதும் அதற்கு எதிரான போராட்டங்கள் வெடித்து கிளம்புவதும் சோசலிசமே நெருக்கடிக்கு தீர்வாக அமையும் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
மாமருந்து
அந்தந்த நாடுகளில் நிலவி வரும் அரசியல் நிலையற்ற நிலைமைகளை தனக்கு சாதகமாக்கிக்கொண்டு ஆதாயம் தேட ஏகாதிபத்தியம் முயல்கிறது. இதனுடைய ஒரு பகுதி தான் இந்தியாவில், தற்போது மன்மோகன் சிங் அரசு மேற்கொண்டுவரும் பொருளாதார சீர்திருத்தங்கள் என்றபெயரில் மக்கள் மீதான தாக்குதல்கள் அமெரிக்காவின் ஆணையை சிரமேற்கொண்டு நிறைவேற்றுவதில் இன்று மத்திய அரசு இந்திய நாடாளுமன்ற ஜனநாயத்திற்கே வேட்டு வைக்கிறது. அமைச்சரவை கூட்டங்களிலேயே  இன்று  சாதாரண  இந்தியனின்  தலைவிதி  நிர்ணயிக்கப்படுகிறது.
உலகமயம், தாராளமயம், தனியார் மயம் போன்ற கொள்கைகளை அமல் படுத்துவதின் காரணமாகவே இன்று மைய அரசிலும் பெரும்பான்மையான மாநில அரசுகளிலும், தலைவிரித்தாடும் லஞ்சமும், ஊழலும். மக்களிடையே தலைவிரித்தாடும் வறுமைப் பசியும் ஆகும். தற்கொலை, வேலையின்மை, பாலின சுரண்டல் உள்ளிட்ட பல கொடிய உயிர்க்கொல்லி நோய்களை இது உருவாக்கியுள்ளது.இதற்கு மருந்து உழைக்கும் மக்களின் ஒற்றுமையை விரிவாக்கி போராட்டங்களை ஒருங்கிணைத்து, சோசலிச சக்திகளை வலுப்பெறச் செய்து அரசியல் அதிகாரம் பெற வைப்பதுமே ஆகும். இந்த சமூக மா மருந்து உருவாகுமிடம் தொழிற்சங்க கூடங்களே! இதை உருவாக்கும் மருத்துவர்கள் தொழிலாளர்களே! சீரிய இப்பணியினை செய்து முடிக்க நவம்பர் புரட்சி வகுத்துக் கொடுத்த பாதையில் முன்னேறுவோம். 
மதுரை BSNLEU மாவட்டசங்கம் அனைவருக்கும்                             நவம்பர்-7   புரட்சி தின  நல் வாழ்த்துக்களை  உரித்தாக்குகிறது
.....நன்றி தீக்கதிர் 

No comments: