அ.சவுந்தரராசன்CITU ஆஸ்திரேலியா பயணம்
. . .
உலகமயம், தாராளமயம், தனியார் மயம் அமலான வளர்முக நாடுகளிலும் தொழிலுக்கும், தொழிலாளர்களுக்கும் கடும் பாதிப்புகள் ஏற்பட்டன. ஏகாதிபத்திய நாடுகளின் உற்பத்தி பொருட் கள் வளரும் நாடுகளின் சந்தைகளில் குவியவும் பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் மூலதனத்தை இந்த நாடுகளில் செலுத்தவுமான நிகழ்வு போக்கு தீவிரப்பட்டது.புதிய பன்னாட்டு நிறுவனங்களில் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை, கூட்டுப்பேர உரிமை மறுக்கப்பட்டது. தொழிற்சங்கம் அமைக்க முயற்சித்தவர்கள் கடும் அடக்குமுறைக்கும், பழிவாங்கலுக்கும் உள்ளாக்கப்பட்டனர்.இந்த நாடுகளின் அரசுகள் பன்னாட்டு நிறுவனங்களுக்கும், பெரும் முதலாளிகளுக்கும் கூச்ச நாச்சமில்லாமல் துணை நின்றன.இந்த உலகமய தீமைகளை எதிர்த்தும், தொழிற்சங்க உரிமைகளை நிலைநாட்டவும் உலகின் தெற்கு பகுதியில் உள்ள ஆசியா-பசிபிக் நாடுகளில் உள்ள தொழிற்சங்கங்கள் ஒரு கூட்டமைப்பை உருவாக்கி பன்னாட்டு போராட்டத்தை முன்னெடுக்கத் திட்டமிட்டன.இந்த அமைப்பின் பெயர் சிக்டூர் என்பதாகும்.இந்த அமைப்பில் பிரேசில், தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், தென்கொரியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், அர்ஜென்டினா போன்ற நாடுகளில் உள்ள தொழிற்சங்கங்கள் அங்கம் வகிக்கின்றன.இந்த அமைப்பின் சர்வதேச மாநாடு டிசம்பர் 2 முதல் 6 வரை ஆஸ்திரேலியாவில் உள்ள பர்த் நகரில் நடைபெறுகிறது.இம்மாநாட்டிற்கு இந்தியாவிலிருந்து செல்கிற 12 பேர் கொண்ட குழுவில் சிஐடியு தமிழ்மாநிலக்குழு தலைவர் அ.சவுந்தரராசன் பங்கேற்கிறார். அவர் சென்னையிலிருந்து 29ம் தேதி இரவு 12 மணிக்கு கோலாலம்பூர் வழியாக பர்த் நகருக்கு பயணம் மேற்கொள்கிறார்.பயணம் எல்லாவகைலும் வெற்றி பெற நமது BSNLEU மனதார வாழ்த்துகிறது.

No comments:
Post a Comment