Thursday 14 November 2013

ஒபாமாவின் செல்வாக்கு சரிந்துள்ளதாக கருத்துக்கணிப்பில். .

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் செல்வாக்கு சரிந்துள்ளதாக ஒரு கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கருத்துக்கணிப்பு
அமெரிக்க ஜனாதிபதியாக தொடர்ந்து இரண்டாவது முறையாக, ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஒபாமா (வயது 52). ஆனால் சமீப காலமாக ஒபாமாவின் செல்வாக்கு சரிவு கண்டு வருவதாக தகவல்கள் கூறுகின்றன.ஒபாமாவின் தற்போதைய செல்வாக்கு நிலவரம் எப்படி என்பது குறித்து அங்குள்ள குயின்னிபியாக் பல்கலைக்கழகம் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தியது. நாடு முழுவதும் கடந்த 6ந் தேதி தொடங்கி 11ந் தேதி வரை நடந்த சர்வேயில் 2,545 பதிவு செய்த வாக்காளர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
செல்வாக்கு தடாலடி சரிவு
இந்த கருத்துக்கணிப்பின் முடிவில், இதுவரை இல்லாத அளவுக்கு ஒபாமாவின் செல்வாக்கு தடாலடியாக சரிவு கண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 54 சதவீதம் பேர் ஒபாமாவின் பணிகளை ஏற்கவில்லை. 39 சதவீதம் பேர் மட்டுமே ஒபாமாவின் பணிகளில் திருப்தி தெரிவித்துள்ளனர்.ஒபாமாவின் சரிவு, இதே காலக்கட்டத்தில் முன்னாள் ஜனாதிபதியும், குடியரசு கட்சி தலைவருமான ஜார்ஜ் புஷ் கண்ட சரிவுக்கு சமமாக அமைந்துள்ளது என வாஷிங்டன் தகவல்கள் கூறுகின்றன.
.....தினத்தந்தி

No comments: