Sunday, 10 November 2013

திண்டுக்கல்..திருப்புமுனை ....மாநாடு...

திண்டுக்கல்..திருப்புமுனை ....மாநாடு...

அருமைத் தோழர்களே! அனைவருக்கும் வணக்கம்...  மதுரை மாவட்ட சங்கத்தின் 7வது மாவட்ட மாநாடு திண்டுக்கல்லில் மிக மிக சீரும் சிறப்புமாக நடைபெற்றது.முதலில் அனைத்து வழிகளிலும் சிறப்பாக மாநாட்டை நடத்திக் கொடுத்த திண்டுக்கல் மாவட்ட  தோழர்களுக்கு,மாவட்ட சங்கம் உளப்பூர்வமான வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் உரித்தாக்குகிறது. அடுத்தபடியாக மாநாட்டை வரவேற்புக்குழு தலைமை பொறுப்பு ஏற்று சிறப்பித்த மரியாதைக்குரிய மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் தோழர். K. பாலபாரதி MLA, அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக் களையும், நன்றியையும் உரித்தாக்குகிறோம். மேலும் நமது அழைப்பினை ஏற்று வருகை புரிந்து சிறப்புரை வழங்கிய,CITUவின்அகிலஇந்திய நிர்வாகி தோழர்.பா.விக்ரமன் அவர்களுக்கும், திருமிகு.S.E. ராஜம் ITS, GM-BSNL,மதுரை அவர்களுக்கும், நமது BSNLEU மாநில சங்க நிர்வாகிகள் தோழர்கள், A.பாபு ராதாகிருஷ்ணன்,-M.நாராயணசாமி,-C.பழனிசாமி,-C.செல்வின்சத்தியராஜ்,-   S.ஜான் போர்ஜியா ஆகியோருக்கும்,நமது BSNLEU  மாநாட்டு   பேரணியை துவக்கிவைத்த திரு.சோலை M. ராஜா அவர்களுக்கும்,வாழ்த்துரை வழங்கிய தோழர்கள்,N.சுரேஷ்குமார்,AIIEA,- S.சிவகுருநாதன்,NFTE,- J.பால சுப்ரமணியன்,AIBSNLEA,- L.கண்ணன்-WRU,-முபாரக்அலி-TNGEA, -N.சோணைமுத்து,TNTCWU  ஆகியோருக்கும்,தேசியக் கொடியை ஏற்றிவைத்த தோழர்.K.R.கணேசன்,உள் ஆட்சிதுறை ஊழியர்கள் சங்கத்தின் பொதுசெயலர் அவர்களுக்கும், நமது BSNLEU பேரியக்கத்தின் செங்கொடியை ஏற்றிவைத்த நமது மாவட்டசங்கத்தின் உதவி செயலர் தோழர்.G.K.வெங்கடேசன் அவர்களுக்கும்,நமது நன்றிதனை உரித்தாக்குகிறோம்.
நமது BSNLEU மதுரை மாவட்ட பேரணி செய்தி தினமலர்  பத்திரிகையில் 






























மாநாட்டின் சிறப்புகளில் சில...
  • மாநாட்டு பேரணியில் 100 க்கும் மேற்பட்ட மகளிர் தோழர்கள், ஒரே மாதிரியான சீருடை உடன் பங்கேற்றது மிக மிக சிறப்பம்சம் ஆகும்
  •  600க்கும் மேற்பட்டோர்   திண்டுக்கல் முக்கிய சாலைகளில் கோரிக்கைஅட்டை முழக்கங்களுடன் செங்கொடி ஏந்தி சென்றது நகரின் அனைத்து மக்களின் கவனத்தையும் ஈர்த்தது 
  • தலைவர்கள்,அதிகாரிகள்,தோழமைசங்க நிர்வாகிகள்,உறுப்பினர்கள்  இப்படி அனைவரின்   பங்கேற்பு மாநாட்டிற்கு சிறப்பு சேர்த்தது
  • இரண்டுநாட்கள் மாநாடு,சார்பாளர்கள்/பார்வையாளர்கள் சிறப்பம்சம்.
  • மாநாட்டு அறிக்கை ஏகமனதாக அனைவராலும் பாராட்டப்பட்டது.
  • இரண்டு நாட்கள் மாநாட்டில் அசைவ,மற்றும் சைவ உணவை அளவு கடந்த அன்போடு உபரிசத்த விதம் பாராட்டுக்குரியது
  • அனைத்திற்கும் மேலாக  ஒன்றுபட்ட மாவட்டநிர்வாகிகளை மாநாடு தேர்ந்து எடுத்தது மிக,மிக சிறப்பு அம்சமாகும்  
  • இம்மாதம் இலாக்கா பணிநிறைவு பெறும் தோழர் G.K.வெங்கடேசன் அவர்களுக்கு பாராட்டு விழா. 
  • மத்திய சங்கத்திற்கு ரூ. 50,000/-மும்,  மாநில சங்கத்திற்கு  ரூ. 25,000/-மும் நன்கொடையாக வழங்கப்பட்டது.
  • தோழர் H.ஸ்ரீராமன் TM(O)-CBM அவருக்கு ரூ. 10,000/- வழங்கப்பட்டது.

மாநாட்டில் தேர்ந்துஎடுக்கப்பட்ட நிர்வாகிகள் -மாநில சங்க நிர்வாகிகளுடன் 

                                                               
மாநாட்டின் துவக்க உரை நிகழ்த்துகிறார் தோழர்.A.பாபு ராதாகிருஷ்ணன் ACS-BSNLEU

மாநாட்டின் கருத்தரங்கத்தில் தோழர்.பா.விக்ரமன்.CITU கருத்தாழமிக்க உரை 

மாநாட்டை ஒட்டி நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட மகளிர் ஒரு பகுதி சீருடையில் 

மாநாட்டு அரங்கில் கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதி 
மாநாட்டு பேரணியை நமது சங்க கொடி அசைத்து  துவக்கி  வைத்தார் திரு.சோலை.M.ராஜா 

1 comment:

radhakrishnan said...

மாவட்ட மாநாடா இல்லை மாநில மாநாடா என்று பிரமிக்கும் அளவுக்கு முழுமையான செழுமையான மாநாட்டை நடத்தியமைக்கு எனது உளமார்ந்த வாழ்த்துக்கள்!
-- ராதா