Tuesday, 24 December 2013

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் . . .

ஒரு மனிதன், ஒரு ஞானியை சந்தித்து தன் வாழ்கையில் வெற்றி பெற ஆலோசனைகேட்டார். ஞானியும் ஒரு கல்லைக் எடுத்து அம்மனிதனிடம் கொடுத்து காய்கறிசந்தைக்குப் போய் விற்பது போல நடித்து மக்களின் நிலையைத் தெரிந்து வரச்சொன்னார்.அம்மனிதனும் சந்தைக்கு சென்று கல்லின் அருமை பெருமைகள் பலவற்றைக் கூறினான். ஆனால் ஒரு சிலரே அதுவும் மிகக் குறைந்த விலைக்குகேட்டார்கள். அம்மனிதன், ஞானியிடம் வந்து,விபரம் கூறி அங்கு கல்லை பத்துபைசாவிற்கு மேல் விற்க முடியாது என்று கூறினான். ஞானி அடுத்து அதே கல்லைதங்க நகைகள் விற்கும் கடை வீதிக்கு எடுத்து சென்று அதேபோலக் கவனிக்கசொன்னார்.அம்மனிதன் கடை வீதிக்கு சென்று, திரும்பிவந்து ''இங்குபரவாயில்லை.கல்லை ஆயிரம் ரூபாய் வரை கேட்கிறார்கள், ''என்றான்.பின்னர் ஞானிஅவனை அந்தக் கல்லை எடுத்துக் கொண்டு வைர வியாபாரம் நடக்கும்இடத்திற்கு எடுத்து சென்று அதே முயற்சியை செய்ய சொன்னார்.அங்கு போய்வந்தஅம்மனிதன், ''இங்கு இந்தக் கல்லை ஐம்பதாயிரம் ரூபாய்க்குவிற்கலாம்,''என்றான்.இப்பொழுது ஞானி சொன்னார், உன் மனநிலையின்மதிப்பு பத்து பைசா தான். உன்னுடைய சிந்தையும் காய்கறி சந்தை அளவில்தான்உள்ளது அதை வைரம் விற்கும் கடையைப்போல உயர்த்து அப்பொழுது உன் வாழ்க்கைஉயரும், நீ வெற்றிபெருவாய்என்றார்.
ஆம் நண்பர்களே, உயர்ந்தவைகளையே சிந்திப்போம் அப்பொழுது நாமும் உயர்தபடுவோம்.
அனைவருக்கும் இந்நாளில் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை BSNLEU மதுரை மாவட்ட சங்கம் உரித்தாக்குகிறது.

No comments: