Saturday, 14 December 2013

மதுரையில் பதிவு செய்தவுடன் BSNL ப்ராட்பேண்ட் சேவை. . .

பதிவு செய்த உடன் பி.எஸ்.என்.எல் ப்ராட்பேண்ட் சேவை!

          பதிவு செய்யப்பட்ட உடனேயே சேவையினைக் குறிப்பிட்ட இடங்களில் வழங்க நமது மதுரை  பி.எஸ்.என்.எல் பொதுமேலாளர் திருமிகு.S.E.ராஜம் அறிவித்துள்ளார்இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
          "
பி.எஸ்.என்.எல். பிராட்பேண்ட் சேவை மதுரை நகரில் குறிப்பிட்ட இடங்களில் உடனுக்குடன் வழங்கப்பட உள்ளது. அதன்படி, அழகர்கோவில் ரோடு, ஆத்திகுளம், புதூர் லூர்துநகர், சிட்கோ, கோமதிபுரம் 1, 5 வது தெருக்கள், மானகிரி, மாட்டுத்தாவணி, கூடல்புதூர், ஜெயராஜ் நகர், சாந்திநகர், ரயிலார் நகர், மகாத்மாகாந்தி நகர், கிருஷ்ணாபுரம் காலனி, திருப்பாலை, உச்சப்பரம்பு ரோடு, .பி.காலனி, பொறியாளர் நகர், எம்.எம்.எஸ்.காலனி, எழில்நகர், கண்ணனேந்தல் ஆகிய இடங்களில் பிராட்பேண்ட் இணைப்பு தேவைப்படுபவர்கள் 94861 02368 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
          
மதுரையில் உள்ள 4 மாசி வீதிகள்(கீழ, மேல, தெற்கு, வடக்கு), ஆவணி மூல வீதிகள், மாரட்டு வீதிகள், வெளி வீதிகள், அழகப்பன் நகர், பழங்காநத்தம், தெப்பக்குளம், வில்லாபுரம் ஹவுசிங் போர்டு ஆகிய இடங்களில் இணைப்பு தேவைப்படுபவர்கள் 94431 00461 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்
          
மதுரை புதுஜெயில் ரோடு, மேலப்பொன்னகரம், ..ரோடு, ஆரப்பாளையம் பஸ் நிலையம், கரிமேடு, அழகரடி, சுடுதண்ணீர் வாய்க்கால் ரோடு, லட்சுமி சுந்தரம் என்களேவ், ராஜ் கிருஷ்ணா பிளாசா, ஜெய்நகர் அருகில், திருநகர் 1 & 8 வது பஸ் நிறுத்தம் வரை, ரெயில்வே காலனி, குவாலிட்டி கேர் மருத்துவமனை, எல்லஸ் நகர் ஹவுசிங்போர்டு, எஸ்.எஸ்.காலனி ஆகிய இடங்களில் இணைப்பு தேவைப்படுபவர்கள் 94861 02387 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்."
         
 இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.​நமது மதுரை மாவட்ட பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின்  இந்த அறிவிப்பு சம்மந்த பட்ட பகுதி பொதுமக்களிடையே பெருத்த வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கிறோம். 

1 comment:

SOUNDAR M said...

DEAR COMRADE, THIS MATTER WILL BE EXHIBITED IN FRONT OF RELAVANT EXCHANGE BUILDINGS BY HOLDINGS AS WELL AS EXISTING ADVT BLEX BOARDS BY OUR DISTRICT ADMIN OR BY OUR UNION.NEWS PAPER MESSAGE NOT ENOUGH FOR THIS PURPOSE. I THINK THIS PROCESS WILL INCREASE OUR DISTRICT REVENUE FURTHER. WITH THANKS..SOUNDAR.M.