இந்தியா முழுவதும் உள்ள உடல் உழைப்பு தொழிலாளர்களுக்குப் பணிப் பாதுகாப்பும், வேலைக்கான கூலியும் வழங்கக் கோரி சிஐடியு தொடர்ந்து போராடி வருகிறது. தொழிற்சங்கங்கள் நடத்திய போராட்டத்தின் காரணமாக, 1982 இல் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். உடல் உழைப்பு தொழிலாளர் சட்டத்தை நிறைவேற்றினார். ஆனால், இப்போது தொழிற்சங்கப் பிரதிநிதிகள் நலவாரிய அலுவலகத்துக்கு வரக்கூடாது என்கின்றனர். இத்தகைய போக்கு மாற வேண்டும் என்பதற்காகவே இப் போராட்டம் நடத்தப்படுகிறது என்றார். மதுரை தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.அண்ணாதுரை,சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் பா.விக்ரமன், புறநகர் மாவட்டச் செயலர் பொன்.கிருஷ்ணன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். சிஐடியு மாநகர் மாவட்டச் செயலர் வீ.பிச்சை, மாவட்டத் தலைவர் ஆர்.தெய்வராஜ், மாவட்ட பொருளாளர் எஸ்.சந்தியாகு, புறநகர் மாவட்டத் தலைவர் கே.அரவிந்தன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நலவாரிய அலுவலகத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தப்பட்டது. அதையடுத்து நலவாரிய அலுவலர்கள் பேச்சு நடத்தினர். கோரிக்கைகள் குறித்து பேசி தீர்வு காண்பது என முடிவு செய்யப்பட்டது.
Wednesday, 18 December 2013
மதுரையில் சிஐடியு சார்பில் குடியேறும் போராட்டம் . . .
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment