Monday 23 December 2013

வங்கி ஊழியர் 16 வது மாநில மாநாடு மதுரையில் . . .

இந்தியன்வங்கிஊழியர்சங்கமாநிலமாநாடு
   
 இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேசனின் (ஐபிஇஏ) 16 வது மாநில மாநாடு மதுரையில் ஞாயிறன்று       22-12-13 துவங்கியது IBEA தமிழக  தலைவர்  .கிருட்டிணன்  தலைமை  வகித்தார். வரவேற்புக்குழுத் தலைவர் இரா.அண்ணாதுரை வரவேற்புரையாற்றினார். உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி .சந்துரு மாநாட்டினைத் துவக்கி வைத்து உரையாற்றி னார். IBEA தலைவர் .கே. ரமேஷ்பாபு சிறப்புரையாற் றினார்.சிஐடியு மாவட்டஉதவித் தலைவர் பா.விக்ரமன், கனராவங்கிப் பணியாளர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் என்.இராச கோபால்ஆகியோர்வாழ்த்துரை வழங்கினர்.இதனைத் தொடர்ந்து பெண் ஊழியர் சிறப்பு மாநாடு நடைபெற்றது. சங்கத்தின் உதவித்தலைவர் லட்சுமி கோவிந்தராசன் தலைமை வகித்தார். அனைத்திந்திய ஜனநாயகமாதர் சங்க மாநில பொதுச்செயலாளர் பி.சுகந்தி சிறப்புரையாற்றினார். IBEA பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. உலகமய கொள்கையால் வங்கிகளின் அஸ்திவாரம் தகர்க்கப்படுகிறது: நீதிபதி சந்துருமாநாட்டை துவக்கிவைத்து, பிரதிநிதிகளிடையே நீதிபதி .சந்துரு உரையாற்றினார். மத்திய அரசு கடைப்பிடித்து வரும்
உலகமயம், தனியார்மயம், தாராளமயக் கொள்கைகளால் பொதுத்துறை வங்கிகளின் அஸ்திவாரம் கொஞ்சம், கொஞ் சமாக உடைக்கப்பட்டு வருகிறது,வங்கித்துறை மட்டுமின்றி அனைத் துத்துறைகளும் தற்போது கடும் நெருக்கடியை சந்திக்கின்றன. சுதந்திரமடைவதற்கு முன்பு சில தனியார் வங்கிகள் இருந்தன. அவற்றிற்கு வழிகாட்டுதலோ, குறிக் கோள்களோ இல்லை. இப்படி துவங்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த ஒரு தனியார் வங்கி காணாமல் போனது. இதை யடுத்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு பலருக்கு பணம் கிடைத்தது. இதனால், வங்கிகளை கட்டுப்படுத்த சட்டமுறை
உருவானது. நாடு சுதந்திர மடைந்த பின்பு, பொதுத்துறை வங்கிகள் துவங்கப்பட்டன. இதற்கு முன்பு இருந்த வங்கிகளில் பொதுமக்கள் முதலீடு செய்த பணத்தை தனியார் நிறுவனங் களில் போட்டு சிலர் சொந்த ஆதாய மடைந்தனர். தனியார் வங்கி ஊழியர்களுக்கு சட்டப்பாதுகாப்பு இல்லை.இதனால், 1969 பின் வங்கிகள் தேசிய மயமாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்த சூழ்நிலையில் தான், வங்கி ஊழியர் சங்கம் உருவானது. போராடிப் பெற முடியாத சில கோ ரிக்கைகளை நீதிமன்றம் மூலம் பெற முடிந்தது. 75 சதவீதம் தொழில் பழகு நர்கள், 25 சதவீத நிரந்தர ஊழியர்கள் என்பதை மாற்றியது பஞ்சாபகேச சாஸ்திரி நீதிமன்ற தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பு தான். இதன் பிறகு தொழில் தகராறு சட் டத்தின் கீழ் பெறப்பட்ட தீர்ப்பு தேசாய் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடரப்பட்ட தாகும். இந்த தீர்ப்பின் அடிப்படையில் தான் இருதரப்பு ஒப்பந்தம் உருவானது. இதற்கு முன்பிருந்த மூன்றடுக்கு முறை யில் ஊழியர் கோரிக்கைகளை வங்கி தீர்ப்பாயம் தாமதப்படுத்தியது. நீதிமன்றங்களைத் தவிர்த்து வங்கி நிர்வாகத்திற்கு அழுத்தம் தந்து இருதரப்பு ஒப்பந்தம் பல போடப்பட்டன. போராட்டம் தந்த போனஸ் : தொழில் தகராறு சட்டம் தொடர் பாக, வங்கி நிர்வாகம் கணக்கு வழக்குகளைத் தெரிவிக்க முடியாது என்ற தீர்ப்பு ஊழியர்களுக்கு பின்னடைவை ஏற்படுத் தியது.நீதிமன்றம் செல்வது ஏமாற்று வேலை என முடிவெடுத்த பின்பு தான், இருதரப்பு ஒப்பந்தம் பெற ஊழியர்கள் முன்வந்தனர். போனஸ் என்பது தொழிலாளர்களின் உரிமை: லாபமில்லாவிட்டாலும் தரவேண்டும் என்ற வாதம் முன் வைக்கப்பட்டது.ஆனால்,அதைஆணை யம் நிராகரித்தது. 1965 ல் போனஸ் பட்டுவாடா சட்டம் அமலானது.8.33 சதவீத குறைந்தபட்ச போனஸ் என நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், நிறுவனங் கள், இருப்பு கணக்குகளை பல்வேறு வகைகளில் கையாள ஆரம்பித்தனர். சட்டம் போனஸ் தரவில்லை. ஆனால், இருதரப்பு ஒப்பந்தம் மூலம் தான் போனஸ் கிடைத்தது.      
 எல்ஐசி ஊழியர்கள் போனசுக்கு நடத்திய போராட்டத்தை படிப்பினையாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால், போனஸ் நிறுத்தப் பட்டது. இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. போனஸ் தராமல் இருப்பது தவறு என முதல் முறையாக உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. கொடுக்கப்படாத ஊதி யம் சொத்துரிமை. அதை தராமல் இருக் கக்கூடாது என்று தீர்ப்பு வழங்கப்பட் டது. ஆனால், எல்ஐசி நிர்வாகம் 21 நாளுக்கு பிறகு ஒப்பந்தம் ரத்தாகும் என்றது. மீண்டும் எல்ஐசி ஊழியர்கள் வழக்குத் தொடுத்தனர். வி.ஆர்.கிருஷ்ணய்யர் தலைமையிலான பெஞ்ச், போனஸ் வழங்க வேண்டும் என்ற உத்தரவை வெளி யிட்டது. ஆனால், மத்திய அரசு, அவசர சட்டம் மூலம் தடுத்தது. மீண்டும் வழக்குத் தொடுக்கப்பட்டது.ஒன்றுபட்ட போராட்டம் : தனியார் வங்கிகள் தேசியமயமாக்கப் பட்டதன் நோக்கம் நிறைவேறியதா? 20 வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. இப்போது பணம் போடுபவர்களுக்கு செக்யூரிட்டி கிடையாது என்கிறார்கள். ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப் படுகிறது. வங்கிகள் பாதுகாப்பு பணிகள் தனியார்மயப்படுத்தப்படுகிறது. ஏடிஎம் வங்கிகளில் பணம் எடுப்பவர்களுக்கு பாதுகாப்பு என்பது இல்லாமல் போய் உள்ளது. ஆகவே, பொதுத்துறை வங்கி களைப் பாதுகாக்க வேண்டும் என்றால் வங்கி ஊழியர்கள் மட்டுமின்றி எல்ஐசி, பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள் என அனைவரும் ஒன்றுபட வேண்டும். இப்போராட்டத்திற்கு பொதுமக்களை யும் திரட்ட வேண்டும். வங்கித்துறையை உலகமயக்கொள் கைகள் கடுமையாகத் தாக்குகின்றது. வங்கிகளின் எதிர்காலம் குறித்த கேள்வி எழும் போது தான், தொழிற்சங்கங்க ளின் பங்கு இதில் முக்கியத்துவம் வாய்ந் ததாக மாறுகிறது. உலகமயம், தனியார் மயம், தாராளமயக் கொள்கைகளால் பொதுத்துறை வங்கிகளின் அஸ்திவாரம் கொஞ்சம்,கொஞ்சமாக உடைக்கப் பட்டு வருகிறது. ஆட்குறைப்பு நடவடிக்கை வேகமாக நடைபெறுகிறது. வங்கி தனது வராக்கடனை நீதிமன்றங்கள் மூலம் வசூல் செய்யலாம் என்ற வாய்ப் பை உதறி விட்டது. தனியார் வசம் இச் சேவையை வழங்குகிறது. வங்கிகளுக்கு கூடுதல் அதிகாரம் உள்ளதை கொண்டு இப்படியான அதிகார துஷ்பிரயோகங் கள் நடைபெறுகிறது. தேசியமயமாக்கல் என்ற கொள்கையை தோற்கடிக்க ஊழல் அரசியல்வாதிகள்,அதிகாரிகள் சிலர் முயற்சி செய்கின்றனர். நமது போராட் டத்தின் பலத்தை வைத்து இத்தகைய பிற்போக்குத்தனத்தை முறியடிக்க வேண்டும்.கூட்டுப்பேர உரிமையை நீர்த் துப் போக செய்யும் சதியை முறியடிக்க வேண்டும். இதுவரை செய்யப்பட்ட சட்டங்கள் எல்லாம் தொழிலாளர்கள் போராடி பெற்ற உரிமையாகும். இவ்வாறு நீதியரசர் தோழர்..சந்துரு பேசினார்.வங்கி ஊழியர்களின் மாநில மாநாட்டில்  நமது BSNLEU மாவட்ட சங்கம் சார்பாக மாவட்ட தலைவர் தோழர்.C.செல்வின் சத்தியராஜ்,மாவட்ட செயலர்,தோழர்.எஸ்.சூரியன் கலந்து கொண்டனர்.

No comments: