Wednesday 11 December 2013

ஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கைக்கான எழுச்சிமிகு பேரணி

அருமைத்தோழர்களே!
11.12.13 பேரணியை துவக்கிவைத்து CITU மாவட்ட செயலர்,தோழர்.V.பிச்சை உரை. 
ஒப்பந்த தொழிலாளர்களின் 10 அம்ச கோரிக்கையை வலியுறித்து கூடல் மாநகரில் கூடியது எம் கூட்டம்,கண்டவரெல்லாம் வியக்கும்வண்ணம் 11.12.13 (தோழர்.K.G.போஸ் நினைவு நாளில்,முண்டாசு கவிஞன் பாரதியாரின் பிறந்த நாளில்) அன்று நடைபெற்ற BSNLEU + TNTCWU இரண்டு மாவட்ட சங்கங்களின் சார்பாக நீதி கோரி பேரணி மிக மிக சக்தியாக இருந்தது.சரியாக மாலை 3.30 மணிக்கு துவங்கிய பேரணிக்கு தோழர்கள்,C. செல்வின் சத்தியராஜ், K.வீரபத்திரன் கூட்டு தலைமை ஏற்றனர். இந்திய தொழிலாளி வர்க்கத்தின் விடிவெள்ளியும்,வழிகாட்டியுமான இந்திய தொழிற்சங்க மையத்தின்(CITU) மதுரை மாநகர் மாவட்ட செயலர் தோழர்.V.பிச்சை அவர்கள் பேரணியை துவக்கிவைத்து எழுச்சி மிகு  உரை நிகழ்த்தினார். அவரது உரையில் ...இன்று மத்திய அரசு கடைப்பிடிக்கும் தவறான ஊழியர் விரோத,மக்கள் விரோத கொள்கைகளின் காரணமாக BSNLபோன்று அமைப்புசார தொழிலாளர்கள் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகிறார்கள் .இந்நிலை போக்கப்படுவதற்க்கு CITU சங்கம் தொடர்ந்து போராடி வருவது நாடறியும்.மேலும் வேறு எந்த துறைலும் இல்லாத வகையில் BSNL -லில் மட்டும் நிரந்தர மில்லாத ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகள் தீர்விற்காக நிரந்தரமான தொழிலார்களின் BSNLEU சங்கம் தொடர்ந்து போராட்டம் நடத்துவது மிக மிக பாராட்ட வேண்டிய அம்சம் எனக் கூறினார்.அத்தோடு நீங்கள் நடத்தும்  அனைத்து இயக்கங்களுக்கும் CITU சங்கம் என்றும் உறுதுணையாக இருக்கும் என ஆதரவை நல்கி,வாழ்த்தி பேரணியை துவக்கிவைத்தார்.

10 அம்ச கோரிக்கைகள் அடங்கிய அட்டையோடு,உணர்ச்சிமிகு கோஷங்களோடு 47 பெண்கள் உட்பட சுமார் 360 பேர் கலந்து கொண்ட பேரணி JC ரெசிடன்சியில் துவங்கி,லேடி டோக் காலேஜ் வழியாக,சென்ரல் ஸ்கூல் சென்றடைந்து,அதன்பின் பீபி குளம் வழியாக பேரணி G.M.அலுவலகத்தில் நிறைவுற்றது. அங்கு நடைபெற்ற கோரிக்கை விளக்க பேரணி கூட்டத்தில் BSNLEU மாவட்ட செயலர் தோழர்.S. சூரியன், TNTCWU மாவட்ட செயலர் தோழர்.N. சோணைமுத்து ஆகியோர் உரை ஆற்றினர். BSNLEU மாநில துணைத்தலைவர் தோழர்.S. ஜான் போர்ஜியா நிறைவுரை ஆற்றினார். அதன்பின் நிர்வாகிகள் குழு BSNL  மாவட்ட துணை பொது மேலாளர் திரு.ஜேவியர் அவர்களிடம் கோரிக்கைமனுவை சமர்ப்பித்தனர்.நமது BSNLEU மதுரை மாவட்ட  மாநாடு நவம்பர் 8-9 தேதிகளில் சிறப்பாக நடத்தி முடித்த கையேடு கடந்த 07.12.13 அன்று முதல் மாவட்ட செயற்குழுவை நடத்திமுடித்தோம்.அதனுடைய தொடர்ச்சியாக மீண்டும் ஒரு பதிவாக ஒரு அற்ப்புதமான பேரணியை நடத்திக்காட்டியுள்ளோம்.11.12.13 பேரணி சிறக்க உழைத்த அணைவருக்கும் மாவட்ட சங்கம் உளப்பூர்வமான பாராட்டுக்களை,வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது.மேலும் ,மேலும் நமது சங்கப்பணி சிறக்க அணைவரும் உறுதி மொழி ஏற்ப்போம்.
ஒப்பந்த ஊழியர்களுக்கான கோரிக்கை மணுவை மதுரை DGM(HR)திரு.சேவியர் அவர்களிடம் நமது BSNLEU + TNTCWU மாநில,மாவட்ட சங்க நிர்வாகிகள் சமர்ப்பித்த போது 
-----என்றும்தோழமையுடன். . . எஸ்.சூரியன்,மாவட்டசெயலர்.

No comments: