தாய்ப்பால்ஊட்டுவதுதமிழ்நாட்டில்குறைவு
தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டும் பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.குழந்தை பிறந்த முதல் 6 மாதத்துக்கு பெண்கள் கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அதே நேரத்தில் 2 வயது வரை தாய்ப்பால் கொடுத்தால் குழந்தையின் ஆரோக்கியம் மேம்படும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படும் என சர்வதேச அளவில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளன.ஆனால் சமீபத்தில் தேசிய சத்துணவு கண்காணிப்பு செயலகம் நடத்திய ஆய்வில் தமிழ் நாட்டில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என தெரியவந்துள்ளது.அதுவும் பிறந்து 5 மாதம் வரையிலான குழந்தைகளுக்கு ஏராளமான பெண்கள் தாய்ப்பால் கொடுப்பதில்லை.இதுகுறித்து நாடு முழுவதும் குறிப்பிட்ட சில கிராமங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் தமிழ்நாட்டில் பிறந்து 5 மாதம் ஆன குழந்தைகளுக்கு 6 சதவீத பெண்கள் தாய்ப்பால் புகட்டுவதில்லை.அதே வேளையில் 6 முதல் 11 மாதம் வயது குழந்தைகளுக்கு 16.7 சதவீத பெண்களும், 12 முதல் 35 மாதங்கள் வரையிலான குழந்தைகளுக்கு 70 சதவீதம் பெண்களும் தாய்ப்பால் கொடுப்பதில்லை.தமிழ்நாடு தவிர கேரளா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 9 மாநிலங்களிலும் இதற்கு அடுத்தடுத்த நிலை உள்ளது. இந்த நிலை ஏற்படுவதற்கு குடும்பத்தில் உள்ள பெரியவர்கள், தாய்மார்களிடம் தாய்ப்பால் மகத்துவம் குறித்து எடுத்துரைக்காததும், விழிப்புணர்வு மற்றும் வழி காட்டுதல், இல்லாததுமே காரணம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment