Saturday 21 December 2013

செய்தி துளிகள் . . .

வோடபோன் வருமான வரி ஏய்ப்பு
இந்திய வருமான வரித்துறை, பிரிட்டிஷ் டெலிகாம் நிறுவனமான வோடபோன் நிறுவனத்திற்கு 3,700 கோடி வருமான வரி கட்ட சொல்லி நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது விசயமாக மேல் முறை செய்ய 30 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தொகை 2008-09 மதிப்பீடுகளின் ஒரு பகுதியாக மட்டும் தான் உள்ளது.

வங்கி கடன்
வங்கி கடன்களுக்கான EMI (தவணை ) செலுத்தும் தேதி ஒவ்வொரு மாதமும் 10 ஆம் தேதி என்பதற்கு பதில் 20 தேதியாக மாற்றுவதற்கு கனரா வங்கி மற்றும் யூனியன் வங்கி ஆகியவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் வகை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி நமது BSNLEU மத்திய சங்கம் நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது
E1-சம்பள விகிதம்
19-12-2013 அன்று நடைபெற்ற நிர்வாக கமிட்டி கூட்டத்தில் E1 சம்பள விகிதம் நமது ஊழியர்களுக்கு வழங்குவதற்கு  ஏற்று கொள்ளப்பட்டு ,அடுத்து நடைபெற  இருக்கும் பி.எஸ். என். எல் போர்டு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்படும் .நமது போராட்ட அறைகூவலின்படி ஏற்பட்ட உடன்பாட்டில் இது நமது BSNLEU சங்கத்தின் சாதனைகளில்  ஒரு மைல் கல் என்றால் மிகையாகாது.


No comments: