Tuesday 24 December 2013

எம்.ஜி.ஆர்.... நினைவு நாள் - டிசம்பர் . . .24


டாக்டர் எம்.ஜி.ஆர்  தோற்றம் -17-1-1917   மறைவு -24-12-1987
எம்.ஜி.ஆர். என்ற மூன்று எழுத்தால் பாரெங்கும் புகழ்பெற்ற புரட்சித் தலைவர் மக்கள் திலகம் பாரத ரத்னா டாக்டர். எம்.ஜி. இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) என்ற மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் 1917ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் நாள் இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள        நாவலப்பிட்டியில் மருதூர் கோபால மேனனுக்கும் சத்தியபாமாவுக்கும் மகனாகப் பிறந்தார். அவருடைய தந்தையின் மறைவுக்குப் பின் தாயும் மகனும் தமிழகத்தில் கும்பகோணத்தில் குடியேறினார்கள். குடும்ப சூழ்நிலை காரணமாக சிறுவயதிலேயே அவர் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். பின்னர் படிப்படியாக உயர்ந்து திரைப்படங்களில் நடிக்கத் துவ ங்கினார்.1936 ல் சதிலீலாவதி என்னும் திரைப்படத்தில் முதலில் நடித் திருந்தும், 1947ல் அவர் நடித்த ராஜகுமாரி படம் வெளிவரும்வரை அதிகம் புகழ் கிடைக்கவில்லை. தொடர்ந்து வந்த அடுத்த 25 ஆண்டுகள், எம்.ஜி.ஆர். தமிழ் திரைப்பட உலகில் மிக முக்கியமான வர்களில் ஒருவராக விளங்கினார். எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படங்கள் 135. இவற்றுள் அவர் கதாநாயகனா நடித்த படங்களின் எண்ணிக்கை 115.எம்.ஜி.ஆர். முதலில் தங்கமணி என்பவரை மணந்தார். அவர் நோயுற்று இறந்துவிடவே பின்னர் இரண்டாவதாக சதானந்தவதியை மணந்தார். இவரும் நோயுற்று இறந்து விட் டார். பின்னர் எம்.ஜி.ஆர். வி. என் .ஜானகியை மணந்து கொண்டார். துரதிர்ஷ்டவசமாக இவர்களுக்கு குழந்தைப்பேறு வாய்க்க வில்லைஎம்.ஜி.ஆர். ஆரம்பநாட்களில் காங்கிரஸ் ஆதரவாளராகவும், நேதாஜி பக்தராகவும் இருந்தார். பின்னர் ராஜகுமாரி, மந்திரிகுமாரி படப்பிடிப்பு நாட்களில் கலைஞர் கருணாநிதியுடன் கொண்ட நட்பால் திராவிடமுன்னேற்றக் கழகத்தின் பால் ஈர்க்கப்பட்டார். பின்னர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய உறுப்பினராக திகழ்ந்தார். எம். ஜி. ஆர்.  அக்கட்சியின் பொருளாளராகவும் நீண்ட காலம் பணியாற்றினார். சி. என். அண்ணாதுரையின் மறைவுக்குப் பின், முதலமைச்சராக பதவி ஏற்ற கலைஞர் மு.கருணாநிதியுடன் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக எம்.ஜி.ஆர். திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து வெளியேறி னார். 1972ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் நாள் அனைத்திந்திய அண்ணா திரா விட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியைத் துவங்கினார். 1977ல் நடைபெற்ற தேர்தலில் பெரும் வெற்றி பெற்று தமிழக முதல்வராகப் பொறுப் பேற்றார். பின்னர் 1980ஆம் ஆண்டு நடை பெற்ற தேர்தலிலும் வெற்றி பெற்று மீண்டும் இரண்டாம் முறையாக முதல்வரானார். 1984ல் இவர் சிறுநீரகக் கோளாறு காரணமாக கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டார். இதற்கு சிகிச்சை பெற அமெரிக்காவின் புருக்ளின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் இருக்கும் போதே தமிழகத்தில் நடை பெற்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றார். 1987ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதலமைச்சர் பதவியை வகித்து பதவியிலிருக்கும் போதே 1987 ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் நாள் இயற்கை எய்தினார். அவரது மறைவிற்குப் பின் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டதுஇன்றளவும் எம்.ஜி.ஆர். அவர்கள் தாம் நடித்த திரைப்படங்களுக்காக மட்டுமின்றி, தம் ஆட்சிக்காலத்தில் செயல்படுத்திய பல மக்கள் நல்வாழ்வு திட்டங்களுக்காகவும் மிகவும் போற்றப்படுகிறார். அவற்றுள் மிக முக்கியமானது பள்ளி மாணவர்களுக்காக அவர் கொண்டுவந்த சத்துணவுத் திட்டம் ஆகும். எம்.ஜி. ஆர். அவர்கள் பெற்ற விருதுகள் மற்றும் கௌரவங்கள்1960 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டும் இந்தி யில் அதன் வாசகங்கள் இருந்ததால் ஏற்க மறுத்துவிட்டார்.1972 ஆம் ஆண்டு ரிக்ஷாகாரன் படத் துக்காக சிறந்த நடிகருக்கான தேசி விருது 1987ஆம் ஆண்டு மரணத்துக்கு பிந்தைய பாரதரத்னா விருது சென்னை பல்கலை மற்றும் அரிசோனா உலகப் பல்கலையின் டாக்டர் பட்டம்தரப்பட்டது.

No comments: