மானியங்கள் ஏழைகளை எட்டுவதில்லை
இந்திய அரசால் ஏழை மக்களுக்கு வழங்கப்படும் மான்யங்கள் அவர்களைச் சென்று அடைவதில்லை என்று பொருளாதார நிபுணரும், நோபல் விருதாளருமான அமர்த்தியாசென் கூறினார். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆரோக்கியமான, கல்வி அறிவு படைத்த உழைப்பாளிகளை உருவாக்க வேண்டியது மிகவும் அவசியமாகும் என்றும் அவர் கூறினார். ஹைதராபாத் பல்கலைக் கழகமும், ஐஆர்டிஏ நிறுவன மும் இணைந்து நடத்திய ஹைதராபாத் தொடர் உரைகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார். அப்போது அவர் பெரும்பாலான சமயங்களில் ஏழைகளைக் காட்டிலும் வசதியானவர்கள் அதிக மானியங்களைப் பெறு கிறார்கள் என்றும் அவர் தம் உரையில் குறிப்பிட்டார். உதாரணமாக இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு விழுக்காடு மின்சக்தி சலுகையாக அளிக்கப்படு கிறது என்றும், ஆனால் மக்கள் தொகையின் மூன்றில் ஒரு பங்கினருக்கு மின்சக்தியே கிடைப்பதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். அண்மையில் ஒரு மின் தொகுப்பில் ஏற் பட்ட கோளாறு காரணமாக அறுபது கோடி மக்கள் இரு ளில் மூழ்கியதாக ஊடகங்கள் மிகவும் வருத்தப்பட்டன.ஆனால் சுமார் 20 கோடி மக்கள் இருட்டில் நாள்தோறும் வாழ்ந்து கொண்டிருப்பதைப் பற்றி அவை கவலைப்பட வில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆரோக்கியமான, கல்வியறிவு படைத்த உழைப்பாளிகளை உருவாக்க வேண்டியது அவசியம் என்று அவர் குறிப்பிட்டார். உழைக்கும் மக்களுக்கு கல்வியும் ஆரோக்கியமும் அளிப்பதில் பொதுத்துறை நிறுவனங்கள் முன்கையெடுத்து செயல்பட வேண்டும். இவற்றை தனியார் துறையால் ஆக்கப்பூர்வமாக வழங்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment