Sunday 29 December 2013

13 லட்சம் அமெரிக்கர்கள் சலுகைகளை இழந்து விட்டனர்.

அமெரிக்காவின் அடுத்த இரண்டாண்டிற்கான பட்ஜெட்டில் அதிபர் ஒபாமா கையெழுத்திட்டுள்ளார். அதில் ஏற்கனவே அமெரிக்காவில் வேலையில்லாமல் இருந்து வருபவர்களுக்கு என சிறப்பு நிவாரண திட்டம் அமல்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் இந்த முறை நிறைவேற்றப்பட்டுள்ள பட்ஜெட்டில் அந்த திட்டத்தை நீட்டிப்பு செய்யவில்லை. இதனால் 13லட்சம் அமெரிக்கர்கள் மேலும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளார்கள். அமெரிக்காவின் அடுத்த இரண்டு ஆண்டிற்கான பட்ஜெட் மசோதா கடந்த செப்டம்பர் 31ம் தேதிக்குள் நிறைவேற்றப்பட வில்லை. காரணம் ஓபாமாவின் ஜனநாயக கட்சி பெரும்பான்மையாக உள்ள செனட் சபையின் பட்ஜெட் குழுவினர் வைத்த பட்ஜெட்டிற்கு குடியரசு கட்சி பெரும்பான்மையாக உள்ள பிரதிநிதிகள் சபை ஒப்புதல் தரவில்லை. இதனால் பெடரல் அரசின் அலுவலகங்கள் 16 நாட்கள் இழுத்து மூடப்பட்டது. அதன் பின்னர் இரு கட்சிகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தையில் கடன் உச்சவரம்பை உயர்த்துவது, ஒபாமாவின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்திற்கு ஒப்புதல் வழங்குவது உள்ளிட்வற்றை இரு கட்சிகளும் ஏற்றுக்கொண்டன. ஆனால் அதற்கு மாறாக வேiயில்லாதவர்களுக்கு அமலாக்கப்பட்டு வந்த சிறப்பு வேலையில்லா கால நிவாரண திட்டம். பொதுச்செலவினங்களுக்கான நிதியை வெட்டி சுருக்குதல், ஓய்வூதியத்திற்கான பங்களிப்பு தொகையை உயர்த்துதல், அரசு கட்டணங்களை அதிகரித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம் சாதாரண மற்றும் உழைப்பாளி மக்கள் மீது தாக்குதலை தொடுத்திட இருகட்சிகளும் இணைந்து முடிவு செய்தன. அதன் பின்னர் பிரதிநிதிகள் சபையில் பட்ஜெட் மசோதா நிறைவேற்றப்பட்டது.இதில் அமெரிக்காவில் ஏற்கனவே வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு அரசு வாரத்துக்கு 300 டாலர் மற்றும் சில சலுகைகளை அளித்து வந்ததை நிறுத்தியுள்ளது. அந்த திட்டத்தை நீட்டிப்பு செய்வதற்கு நிதி ஒதுக்காமல் அப்படியே திட்டத்தை கைவிட்டு விட்டது. இதனால் இதுவரை வேலையில்லா கால சிறப்பு நிவாரணத்திட்டத்தின் மூலம் பயன்பெற்று வந்த 13 லட்சம் அமெரிக்கர்கள் சனிக்கிழமையுடன் சலுகைகளை இழந்து விட்டனர்.இது பற்றி அமெரிக்க தேசிய பொருளாதார கவுன்சில் இயக்குனர் ஜெனி ஸ்பெர்லிங் கூறும்போது, வேலையில்லா அமெரிக்கர்களுக்கு நிதி ஒதுக்க மறுப்பதால் அமெரிக்கர்களின் பொருளாதார நிலை மேலும் பாதிக்கப்படும். ஏற்கனவே வேதனையில் இருக்கும் அவர்கள் மேலும் துன்பத்துக்குள் தள்ளப்படுவார்கள். அவர்கள் நிலை அறிந்து அவர்களுக்கு அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

1 comment:

rangarajanmba said...

sir
U cannot burden the other citzen at the cost of others ,USA has done a right one after along time wherein India got freebee sys is not good , india should learn from US
rangarajan