தமிழகம் உள்பட இந்திய நாடு முழுவதும் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் புதன்கிழமை (டிசம்பர் 18) வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். ஊதிய உயர்வு உடன்பாடு நிலுவையை உடனடியாக அமல்படுத்த வேண்டும், ஊழியர்களின் நலனுக்கு எதிரான வங்கிச் சீர்திருத்தங்களை நடைமுறைபடுத்தக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்கின்றனர்.
புதுதில்லியில் வங்கிகளின் உயர் அதிகாரிகளைக் கொண்ட ஐபிஏ அமைப்பினர், 9 வங்கி ஊழியர் தொழிற்சங்கங்களைக் கொண்ட அகில இந்திய வங்கி ஊழியர் சங்க (ஏ.ஐ.பி.இ.ஏ) நிர்வாகிகளுடன் திங்கள்கிழமை (டிச.16) நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. எனவே இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது என்று அகில இந்திய வங்கி ஊழியர் சங்கப் பொதுச்செயலர் சி.எச்.வெங்கடாசலம் தெரிவித்தார்.
No comments:
Post a Comment