மதுரை அரசு போக்குவரத்துக் கழக 3 நாள் உண்ணாவிரத போராட்டம் CITU சார்பாக நேற்று துவங்கியது. இடைக்கால நிவாரணம், புதிய சம்பள ஒப்பந்த பேச்சுவார்த்தையை துவக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். மத்திய, மாநில அரசுகள் அகவிலைப் படியை அறிவிக்கும்போதெல்லாம், அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கும் அதை அமல்படுத்துவர். கடந்த ஜன., முதல் ஜூன் வரை 8 சதவீத அகவிலைப்படி வழங்கப்பட்டது. அதில் 3 மாதத் தொகை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. அதன்பின், ஜூலை முதல் அகவிலைப்படி 10 சதவீதம் உயர்த்தப்பட்டது. இத்தொகை 6 மாதங்களாக வழங்கப்படவில்லை. எனவே, சி.ஐ.டி.யூ., போக்குவரத்து ஊழியர்கள் மாநில அளவில் போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர். இதையடுத்து 3 நாள் உண்ணாவிரத போராட்டம் நேற்று துவங்கியது. மதுரை பைபாஸ் ரோட்டில் சங்கத் தலைவர் தோழர்.ராஜேந்திரன் தலைமையில் போராட்டம் நடந்தது. மாவட்ட துணைத் தலைவர்தோழர். விக்ரமன் துவக்கி வைத்தார். பொதுச்செயலாளர் தோழர்.வாசுதேவன், பொருளாளர்,தோழர். கனகசபை உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். மாவட்ட செயலர் தோழர்.பிச்சைமுடித்துவைத்தார்.ஊழியர்கள் கூறியதாவது: மதுரை கோட்டத்தில் 7 ஆயிரம் ஊழியர்கள் உள்ளனர். அகவிலைப்படித் தொகை, ஒவ்வொரு ஊழியருக்கும் ரூ.6 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை நிலுவையில் உள்ளது. பி.எப்., தொகையில் நிர்வாகத்தின் பங்களிப்பையும் சரிவர செலுத்துவதில்லை. இதனால் கடன்பெற இயலவில்லை. மேலும் 1.9.2013 முதல் புதிய ஊதிய ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை நடத்தி இருக்க வேண்டும். அதையும் செய்யவில்லை.தொழிலாளர்களுக்கு 1.9.2013 முதல் இடைக்கால நிவாரணமாக ரூ. 3 ஆயிரம் தரவேண்டும். தொழிற் சங்கங்களை அழைத்து அரசு பேச வேண்டும். இல்லையெனில், டிச.,28ல் தலைமை அலுவலகத்தில் பெருந்திரளாக முறையீடு செய்வோம். பஸ் கட்டணத்தை 35 சதவீதம் அளவிற்கு உயர்த்திய பின்னும், போக்குவரத்துக் கழகங்களில் நிதிப்பற்றாக்குறை உள்ளது என்றார்.
No comments:
Post a Comment