Sunday 15 December 2013

டிசம்பர் 15 - தோழர் பி.ராமமூர்த்தி நினைவு நாள் (1908-1987)

தோழர் பி.ஆர். ஒரு சகாப்தம்
தோழர் பி.ராமமூர்த்தி ஒரு சகாப்தம். தேச விடு தலைக்கும், கம்யூனிஸ இயக்கத்துக்கும், தொழிற் சங்க இயக்கத்துக்கும், தேச முன்னேற்றத்துக்கும் அவர் ஆற்றிய சேவையை அளவிட முடியாது. நமது இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும், பிற்பகுதி யிலும் நடைபெற்ற முக்கியநிகழ்ச்சிகள் ஒவ்வொன் றிலும் தோழர் பி.ஆர்.வகித்த பங்கு சிறப்பானதாகும்.தோழர் பி.ஆர். தமிழ்நாடு மாத்திரமல்ல, அகில இந்தியத் தலைவராக விளங்கினார். அன்னிய ஆட்சியாளரும், காங்கிரஸ் ஆட்சியாளரும் தொடுத்த எத்தனையோ சதிவழக்குகளை பி.ஆர்.சந்தித்தார். எத்தனையோ சிறைக் கூடங்களில் இன்னல் உற்றார். எத்தனையோ போராட்டங் களில் அடிபட்டார்.அவர் மீது போடப்பட்ட சதி வழக்குகளில் அவரே எதிர்வழக்காடி ஆட்சியாளரின் சதித்திட்டங்களைத் தவிடுபொடியாக்கி விடுதலை பெற்றார்.தொழிலாளிகளின் கோரிக்கைகளை வகுப்பதிலும் அவற்றை அடைவதற்கான போராட்ட முறைகளைக் கூறுவதிலும், அப்போராட்டங்களுக்குத் தலைமை தாங்கி, வெற்றி தேடிக் கொடுப்பதிலும் அவருக்கு நிகர் அவரே. நீதிமன்றங்களிலும், சட்டமன்ற, நாடாளுமன்றங்களிலும் உழைப்பாளர் உரிமைகளுக்காக புள்ளி விவரங்களுடனும் பி.ஆர்.நடத்திய வாதங்களை என்றுமே மறக்க முடியாது.நமது தேசத்தின் தொழில்கள் ஏகாதிபத்திய சூழ்ச்சி வலையில் மாட்டிக் கொள்ளக்கூடாது என்பதிலும், நமது நாட்டு விஞ்ஞானிகள், பொறியியல் வல்லுநர்கள் அறிவுச் செல்வத்தையெல்லாம், நமது நாட்டுக்கே பயன்படுத்த வேண்டுமென்பதிலும் கூர்ந்து அக்கறை காட்டினார்.பி.ஆரின் வாழ்க்கை வரலாறு, இந்திய நாட்டின் சுதந்திரப் போராட்ட வரலாறு. தொழிலாளி வர்க்கமும், நடுத்தர வர்க்கங்களும், விவசாயிகளும், மாணவர்களும் நடத்திய போராட்ட வரலாறு. அவரது லட்சியப் பாதையில் நாம் உறுதியோடு நடைபோட வேண்டும். அதுவே அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.

No comments: