Wednesday, 18 December 2013

லோக் அயுக்தாக்கள் மசோதா-2011, நிறைவேறியது...

லோக்பால்  நிறைவேறியது : மக்களவையில்  விவாதம் - சீத்தாராம் யெச்சூரி
கடந்த இரண்டு ஆண்டு காலமாகவே பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்டு வந்த லோக்பால் மசோதா, பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையில், செவ்வாயன்று மாநிலங் களவையில் நிறைவேறியதுஇதைத் தொடர்ந்து நாட்டில் ஊழலுக்குஎதிராக விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஓர் அரசியல் சட்டப்பூர்வ உயரிய அமைப்பு உருவாகும் நடவடிக்கை இறுதிக் கட்டத்தை எட்டி யுள்ளது.செவ்வாயன்று சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற விவாதத்திற்குப்பிறகு, லோக்பால் மற்றும் லோக் அயுக்தாக்கள் மசோதா-2011, மாநிலங்களவையில் நிறைவேறியது.
விவாதத்திற்கு பதிலளித்து பேசிய சட்ட அமைச்சர் கபில்சிபல், இந்தநாள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள் என்றும், இந்த மசோதாவை மாதிரியாகக் கொண்டு மாநிலங்களில் லோக் அயுக்தாக்களை அமைப்பதற்கான சட்டங்களை அனைத்து மாநிலங்களும் நிறைவேற்றும் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.மேலும் இந்த விஷயத்தில் மாநிலஅரசுகளுக்கு மத்திய அரசு எந்த விதமானஉத்தரவுகளையும் இடவில்லை என்றும்கூறினார். இந்த சட்டம் மட்டுமே நாட்டில் ஊழலை ஒழித்துவிடாது என்றும்,அதே நேரத்தில் ஊழலில் ஈடுபடுபவர்களை விசாரிப்பதற்கு அது உதவும் என்றும் கூறினார். லோக்பால் மசோதா வரையறையின் கீழ் பிரதமரைக் கொண்டுவருவது குறித்த கருத்துக்களுக்கு மழுப்பலான பதிலை அவர்அளித்தார்.முன்னதாக மாநிலங்களவை ஆய்வுக்குழு அளித்த பரிந்துரைகளில் மூன்று பரிந்துரைகளைத் தவிர அனைத்தையும் அரசு ஏற்றுக்கொண்டது. ஒரு ஊழல் வழக்கில் லோக்பால் அமைப்பால் நியமிக்கப்பட்ட சிபிஐயின் விசாரணை அதிகாரியை அரசு தலையிட்டு இடமாற்றம் செய்யக்கூடாது என்பது உள்ளிட்டதிருத்தங்களை அரசு ஏற்றுக்கொண்டது.ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய ஒரு பொது ஊழியர் (அரசியல் ஊழியர்), விசாரணை துவங்குவதற்கு முன்பு தனது கருத்துக்களை வெளியிடுவதற்கு வாய்ப்புஅளிக்கப்படக்கூடாது என்ற திருத்தத்தை அரசு ஏற்கவில்லை.

யெச்சூரி கொண்டு வந்த திருத்தம் : மசோதா தொடர்பாக விவாதம் முடிவடைந்த பின்னர் உறுப்பினர்கள் சார்பில் திருத்தங்கள் முன்மொழியும் தருணத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சீத்தாராம் யெச்சூரி ஒரு திருத்தத்தைக் கொண்டு வந்தார்.நாட்டில் பல்வேறு துறைகளில் நடைபெறுகிற பொது - தனியார் கூட்டு திட்டங்கள் அனைத்தும் லோக்பால் மசோதாவின் கீழ் வரவேண்டும் என்று வலியுறுத்தி அவர் கொண்டு வந்த தீர்மானத்தை காங்கிரஸ் மற்றும் பாஜக உறுப்பினர்கள் கூட்டுச்சேர்ந்து தோற்கடித்தனர். யெச்சூரியின் திருத்தத்திற்கு ஆதரவாக 19 வாக்குகளும், எதிராக 151 வாக்குகளும் பதிவாகின.எனினும், இதர பொதுவான பல அம்சங்கள் ஏற்கப்பட்ட நிலையில், சமாஜ்வாதிக் கட்சியைத் தவிர கிட்டத்தட்ட அனைத்துக் கட்சிகளும் குரல்வாக்கெ டுப்பில் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்ததைத் தொடர்ந்து மசோதா நிறைவேறியது.
ஊழலின் ஊற்றுக்கண்ணை அடைக்க வழி என்ன? : சீத்தாராம் யெச்சூரி கேள்வி
ஊழலுக்கு வழிவகுக்கும் `தேவைநிறுத்தப்படும் என்று லோக்பால் கூறுகிறது. ஆனால் அதேசமயத்தில் இது ஊழலுக்கு வழிவகுத்திடும் லஞ்சம் கொடுப்போர் குறித்து மவுனம் சாதிப்பது ஏன்? எனவே, ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருக்கின்ற கார்ப்பரேட் நிறுவனங்கள், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு அரசு சார் நிறுவனங்கள், மதம்சார்ந்த மற்றும் சாராத அனைத்துக் கருணை நிறுவனங்கள் அனைத்தும் லோக்பால் சட்டத்தின் வரையறைக்குள் கொண்டுவரப்பட வேண்டும்.ஊழலை ஒழிக்க வேண்டுமானால் அரசியல்கட்சிகளுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் நன்கொடை என்ற பெயரில் நிதி கொடுப்பது நிறுத்தப்பட்டாக வேண்டும். அதேபோல் அரசு சாரா நிறுவனங்கள் - உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரசு சாரா நிறுவனங்கள் அனைத்தும் - இச்சட்டத்தின் வரையறைக்குள் கொண்டுவரப்பட வேண்டும். அதேபோல் கருணை நிறுவனங்கள் என்ற பெயரில் இயங்கிடும் மதம் சார்ந்த நிறுவனங்கள் உட்பட அனைத்து கருணை நிறுவனங்களும் இச்சட்டத்தின் வரையறைக்குள் கொண்டுவரப்பட வேண்டும்.” 

No comments: