Friday, 20 December 2013

நமது BSNLEU - CHQ மத்திய சங்க செய்திகள் . . .

BSNI-க்கு அடுத்த புதிய CMD திரு.அனுபம் ஸ்ரீவஸ்தவா அவர்கள் ஆகும். 
நமது BSNL நிறுவனத்திற்கு திரு. அனுபம் ஸ்ரீவஸ்தவாஅடுத்த CMD  ஆக தேர்வின்  முடிவில், பொதுத்துறை நிறுவனங்கள் தேர்வு வாரியம் (PESB) மூலம், 19.12.13 அன்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.நமது BSNLEU மத்திய சங்கம் திரு.அனுபம்ஸ்ரீவஸ்தவாஅவர்களைBSNL-CMDஆக  வாழ்த்தி வரவேற்கிறது.
NEPP - பதவி உயர்வு திட்டம்.
18-12-2013 அன்று நடைபெற்ற பிஎஸ்என்எல் போர்டு கூட்டத்தில் NEPP பதவி உயர்வின் கீழ் சராசரி உள்ளீடுகளை(AVERAGE ENTRY) தளர்த்துவதற்கு 18-10-2013 அன்று நமது சங்கத்துடன் ஏற்பட்ட உடன்பாட்டு அடிப்படையில் ஒப்புதல் அளித்துள்ளது .
BSNL ஊழியர்களுக்கான - வங்கி கடன்
நமதுஊழியர்களுக்கு பல்வேறு கடன்கள் கொடுப்பதற்கு காலவரையறை நீட்டித்து யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது .
BSNL மற்றும் MTNL  நிறுவனங்களின் செயல்பாடு 
18/12/2013 அன்று நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தில் பதில் அளித்த நமது இலாக்கா அமைச்சர் திரு. கபில் சிபல் BSNL மற்றும் MTNL  நிறுவனங்களின் செயல்பாடு தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாக தெரிவித்தார்.மேலும் இந்நிறுவனங்களின் நிதி நிலையை மேம்படுத்துவதற்காக 17/04/2013 அன்று அமைச்சர் குழு நியமிக்கபட்டதாகவும் அக்குழு 12/06/2013, 01/08/2013 மற்றும் 12/09/2013 ஆகிய தேதிகளில் கூடி கீழ்க்கண்ட முடிவுகளை எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
அமைச்சர்குழுமுடிவுகள் 
MTNL ஊழியர்களுக்கு BSNL ஊழியர்களுக்கு இணையான ஓய்வூதியம் வழங்குதல்.BSNL க்கு 6 மாநிலங்களிலும், MTNLக்கு மும்பை மற்றும் டெல்லி பகுதிகளிலும் BWA - அலைக்கற்றை கட்டணத்தை திருப்பித்தருதல்.BSNL உருவாக்கத்தின் போது முதலீட்டிற்காக வழங்கப்பட்ட 7500 கோடி கடனில் திருப்பிச்செலுத்தாத கடனை வட்டியுடன்சேர்த்துதள்ளுபடிசெய்தல்.தங்களது செயல்பாடு மற்றும் நிதிநிலை மேம்பாட்டிற்காக BSNL  மற்றும் MTNL  நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு எளிய கட்டண விகிதங்களை அறிவித்தல், புதிய தொழில் நுட்பங்களை புகுத்துதல், புதிய தலைமுறை வலைப்பின்னலை பயன்படுத்துதல் போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அமைச்சர் அறிவித்துள்ளார். 
 அகில இந்தியா அளவில் நடைபெற உள்ள NJCM ஆயபடுபொருள்:
  • RM, GRD பதவிகளில் STAGNATION  தேக்க நிலை தீர்த்தல் 
  • அனைவருக்கும்  போனஸ் வழங்குதல் 
  • 78.2 சத IDA இணைப்பு நிலுவை வழங்குதல்.
  • ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 78.2 சத IDA இணைப்பு வழங்குதல்.
  • 78.2 சத IDA இணைப்புக்கேற்ப அனைத்துப்படிகளும் வழங்குதல்.
  • நாலுகட்டப்பதவி உயர்வை முறைப்படுத்துதல்.
  • SC/ST தோழர்களுக்கு இலாக்காத்தேர்வுக்கான தகுதி மதிப்பெண்களை தளர்த்துதல்.
  • LTC,மருத்துவப்படி மற்றும் LTCயில் விடுப்பை காசாக்கும் வசதிகளை அமுல்படுத்துதல்.
  • BSNLலில் பணி நியமனம் செய்யப்பட்ட தோழர்களுக்கு ஓய்வூதிய திட்டம் வகுத்தல்.
  • TM பயிற்சி முடித்து பதவி இல்லாததால் காத்திருப்போருக்கு பதவி உயர்வு வழங்குதல்.

No comments: