நிலக்கரி ஊழல் வழக்கில் நான் குற்றவாளி என்றால் , அனைத்து முடிவுகளும் எடுத்த பிரதமர் முதல் குற்றவாளி தான் என முன்னாள் செயலர் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.நிலக்கரி சுரங்கங்களை, தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ததில், 1.86 லட்சம் கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம், அறிக்கை தாக்கல் செய்தது. இந்த வழக்கை, சி.பி.ஐ., விசாரிக்கிறது. சுப்ரீம் கோர்ட், கண்காணித்து வருகிறது. சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக, காங்., - எம்.பி., நவீன் ஜிண்டால், நிலக்கரித் துறை முன்னாள் அமைச்சர், தாசரி நாராயணராவ் உள்ளிட்டோர் மீது, ஏற்கனவே, சி.பி.ஐ., சார்பில், முதல்தகவல்அறிக்கைபதிவுசெய்யப்பட்டுள்ளது.
சி.பி.ஐ.ரெய்டு
நேற்று , 'ஆதித்ய பிர்லா' குரூப் நிறுவனங்களின் தலைவர், குமார் மங்கலம் பிர்லா மீதும், நிலக்கரி துறை முன்னாள் செயலர், பி.சி.பரேக் மீதும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. பரேக் ஆகியோருக்கு சொந்தமாக, மும்பை, டில்லி, ஐதராபாத், புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் உள்ள இடங்களில், சி.பி.ஐ., அதிகாரிகள், நேற்று அதிரடிச் சோதனை நடத்தினர். இதில் தொழிலதிபர் பிர்லாவுக்கு சாதகமாக , பி.சி. பரேக் நடந்து கொண்டதாக சி.பி.ஐ. தனது முதல் தகவல் அறிக்கையில் கூறியுள்ளது. விரைவில், விசாரணைக்கு ஆஜராகும்படி, பிர்லாவுக்கும், பரேக்கிற்கும், சம்மன் அனுப்பவும், சி.பி.ஐ., திட்டமிட்டுள்ளது.
பிரதமரும்குற்றவாளிதான்
இந்நிலையில், நிலக்கரித்துறை முன்னாள் செயலர் பி.சி. பரேக், பிரதமர் மீது பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார். அவர் கூறியதாவது: நிலக்கரித்துறையை தன் வசம் வைத்திருந்த பிரதமர் தான் முதல் குற்றவாளி, நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கியதில் அனைத்து முடிவுகளும் அவர் தான் எடுத்தார். இதில் தொழிலதிபர் பிர்லாவின் இரு நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டது அவரது முடிவு . இதில் என்னை மட்டுமே குற்றவாளியாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது. நான் குற்றவாளி என்றால் பிரதமரும் குற்றவாளி தான். இவ்வாறு பரேக் கூறினார். .நிலக்கரி ஊழல் விவகாரத்தில் திடீர் திருப்பமாக, பிரதமர் மீது முன்னாள் செயலர் குற்றச்சாட்டினை சுமத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி பேசுகையில், "சர்ச்சைக்குரிய
நிலக்கரிச் சுரங்கங்கள் ஒதுக்கப்பட்ட வேளையில் நிலக்கரித் துறை அமைச்சர் பொறுப்பை
பிரதமர்தான் கவனித்து வந்தார். ஆனால், நாடாளுமன்றத்தில் இந்த விவகாரத்தை
எதிர்க்கட்சிகள் எழுப்பிய போது மத்திய அரசு அளித்த விளக்கம் திருப்தியளிக்கவில்லை.
பிரதமரின் விளக்கமும் ஏற்கும்படியாக இல்லை. இந்த விவகாரத்தில் சிபிஐ விரைவில்
விசாரணை நடத்தி முறைகேட்டுக்கு யார் மூல காரணம்? என்பதை வெளிப்படுத்த வேண்டும்'
என்றார்.
No comments:
Post a Comment