தூத்துக்குடிகடலில் பயங்கரஆயுதங்களுடன் நுழைந்தஅமெரிக்கக் கப்பல் : 35 பேர் கைது
தூத்துக்குடி
கடலில் ஆயுதங்களுடன் பிடிபட்ட அமெரிக்கக் கப்பலின் கேப்டன் உள்பட 33 பேர் கைது செய்யப்பட்டனர். இந்திய கடல் பகுதிக்குள் நுழைந்த ‘‘சீ மேன் கார்டு ஓகியோ’’ என்ற ரோந்துக் கப்பலை தூத்துக்குடி அருகே இந்தியக் கடலோரக் காவல் படையினர் கடந்த 12–ந்தேதி மடக்கி பிடித்தனர். அந்தக் கப்பலில் ஏராளமான துப் பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் இருந்தன. கப்பல் தூத்துக்குடி துறை முகத்திற்கு கொண்டு வரப்பட்டது. கப்பலில் இருந்த மாலுமிகள் மற்றும் பாதுகாவலர்களிடம் இந்திய கடற்படை, கடலோர காவல் படை, கடலோர பாதுகாப்பு குழுமம் , ஐ.பி., ‘‘கியூ’’ உள்ளிட்ட மத்திய–மாநில உளவுப்பிரிவு போலீசார், உள்ளூர் போலீசார் கூட்டாக விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்தக் கப்பல் அமெரிக்காவின் வாஷிங்டனைத் தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ‘‘அட்வன் போர்ட்’’ என்ற தனியார் கடல் பாதுகாப்பு நிறுவனத்துக்குச் சொந்தமான கப்பல் என்பது தெரிய வந்தது. அந்த கப்பலில் 35 அதிநவீன செமி ஆட்டோமேட்டிக் துப்பாக்கிகள், 5,700 ரவுண்ட் தோட்டாக்கள் இருந்தன. ஆயுதப்பயிற்சி பெற்ற 25 பாதுகாவலர்கள், 10 கப்பல் மாலுமிகள் இருந்தனர். மாலுமிகளில் 8 பேர் இந்தியர்கள். அவர்களில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர். பாதுகாவலர்கள் அனைவரும் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன், எஸ்தோனியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். அந்த அமெரிக்க கப்பலுக்கு தூத்துக்குடியில் இருந்து சட்டவிரோதமாக டீசல் சப்ளை செய்தது உள்ளிட்ட பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து ஆயுதங்கள் வைத்திருத் தல், அளவுக்கதிகமாக துப்பாக்கி தோட்டாக்கள் வைத்திருத்தல், இந்திய கடல் பகுதியில் சட்டவிரோதமாக டீசல் பரிமாற்றம் செய்தது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் கப்பலில் இருந்த 25 பாதுகாவலர்கள், 10 மாலுமிகள் மீது தருவைகுளம் கடலோர காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசிடம் விரிவான அறிக்கையை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கேட்டது. இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார், கப்பலை நேரில் பார்வையிட்டு விசாரணை அதிகாரிகளுடன் ஆலோ சனை நடத்தினார். ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதால் இந்த வழக்கு கடலோர காவல் படையிடம் இருந்து ‘கியூ’ பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது.
No comments:
Post a Comment