தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவ ட்டச் செயலர் தோழர் எம்.தங்கராஜ் சாலைவிபத் தில் அகால மரணமடைந்தார் .
. .
தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலர் தோழர் எம்.தங்கராஜ் சாலைவிபத்தில் காலமானார் என்ற செய்தி ஆழ்ந்த துயரத்தை அளிப்பதாக உள்ளது.மதுரை மாவட்டத்தில் நிலவிய தீண்டாமைக் கொடுமைகளை எதிர்த்து அனைத்துப் பகுதி மக்களையும் திரட்டி வலுவான இயக்கங்களை நடத்திய எம்.தங்கராஜ், தலித்மக்களுக்காக ஊராட்சித் தலைவர் பதவி ஒதுக்கப்பட்ட பாப்பாபட்டி, கீரிபட்டி, நாட்டாமங்கலம் ஆகிய கிராமங்களில் ஜனநாயக ரீதியாக தேர்தல் நடைபெறவும், தேர்வு செய்யப்பட்ட தலித் தலைவர்கள் பதவியில் தொடரவும் முக்கியப் பங்காற்றினார்.
இதனால் அவருக்கு பல்வேறு அச்சுறுத்தல்கள் வந்த போதும் அவர் அஞ்சவில்லை. உத்தப்புரம் தீண்டா மைச் சுவரை அகற்றுவதில் முக்கியப் பங்காற்றிய எம்.தங்கராஜ் ஏழை விவசாயக்குடும்பத்தில் பிறந்தவராவார். விவசாய இயக்கத்தில் இருந்து 1980 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து திறம்பட செயலாற்றினார். பல்வேறு போராட்டங்களில் பங்கெடுத்து சிறை சென்ற எம்.தங்கராஜ், கிராமப்புறங்களில் நிலவிய சமூக ஒடுக்குமுறைக்கு எதிராக போராடிய ஒரு சிறந்த போராளியாகத் திகழ்ந்தார்.
இரங்கல் : தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலர் தோழர் எம்.தங்கராஜ் மறைவிற்கு, BSNLEU,மாநில அமைப்பு செயலர் தோழர்.சி.செல்வின் சத்தியராஜ் BSNLEU மாவட்ட செயலர்
எஸ்,சூரியன் ,முன்னாள் மாவட்ட தலைவர் தோழர்.எம்.சௌந்தர் ,GM(Dev) கிளை தலைவர் தோழர்.என்.செல்வம் ஆகியோர் நேரில் சென்று மலர்
வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர் . அன்னாரது இழப்பு அவரது குடும் பத்தினருக்கு மட்டுமின்றி, சமதர்மத்தை
விரும்புகிற அனைவருக்கும் பேரிழப்பாகும். தோழர் தங்கராஜை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்திற்கும், தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்கும் BSNLEU மதுரை மாவட்டசெயற்குழு சார்பில் ஆழ்ந்தஇரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment