மதக்கலவரங்கள் அரசியல்வாதிகளின் தூண்டுதலால் நடைபெறுவதாக காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் பேசிய அவர், இம்மாநிலத்தில் பூஜ்ஜிய சதவீத வளர்ச்சி தான் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஆட்சிக்கு வந்தவுடன் சமாஜ்வாதிக்கட்சி மக்களை மறந்து விட்டதாகவும் அவர் சாடினார். எதிர்க்கட்சிகள் ஏழைமக்களின் நலனில் அக்கறையின்றி செயல்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். முன்னதாக, முசாபர்நகர் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில், மத கலவரம் தொடர்பாக பேசிய ராகுல் இச்சம்பவத்திற்கு அரசியல்வாதிகளே காரணம் என தெரிவித்தார். கட்சியில் மதவாத சக்திகள் என்று யாருமில்லை என்றும், நாட்டில் சமாதானத்தையும், அமைதியையும் காங்கிரஸ் கட்சி விரும்புவதாகவும் அவர் கூறினார். ஆம் ஆத்மீ உள்ளிட்ட கட்சிகள் நாட்டில் ஒற்றுமையை குலைக்க முயற்சித்து வருவதாக அவர் குற்றம்சாட்டினார்.
No comments:
Post a Comment