புதுச்சேரியில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் என்.எல்.சி நிரந்தரத் தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது.இதன் மூலம், ஊழியர்களுக்கு 20 ஆயிரம் முதல் 35 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும். இந்த ஊக்கத்தொகை வரும் 25 ஆம் தேதிக்குள் வழங்கப்படும்.என்.எல்.சியில் பணிபுரியும் நிரந்தரத் தொழிலாளர்கள் மற்றும் பொறியாளர்கள் என 18 ஆயிரம் பேருக்கு ஊக்கத்தொகை, போனஸ் உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த நோட்டீஸ் அளித்ததையடுத்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.புதுச்சேரியில் உள்ள மத்திய தொழிலாளர் நல உதவி ஆணையர் அலுவலகத்தில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில், என்.எல்.சியின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கள் மற்றும் நிர்வாகத்தினர் கலந்து கொண்டனர்.இந்த புதிய ஒப்பந்தத்தின்படி இரண்டு தவணை ஊக்கத் தொகை வழங்க நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளதுமேலும், ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யத் தேவையான பணி மூப்பு பட்டியலை வரும் 28 ஆம் தேதிக்குள் வெளியிட நிர்வாகத்திற்கு மத்திய தொழிலாளர் நல ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment