இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெறும் மக்கள் பிரதிநிதிகள், உடனடியாக தங்களின் பதவியை இழப்பார்கள் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, பதவி இழக்கும் முதல் அரசியல்வாதி இவர்தான்.இதன் தொடர்ச்சியாக, கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட எம்.பி.க்களான லாலுபிரசாத் யாதவ், ஜகதீஷ் ஷர்மா ஆகியோரும் விரைவில்தகுதிநீக்கம் செய்யப்படுவார்கள் எனத் தெரிகிறது.முன்னதாக, மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை முறைகேடுவழக்கில் ரஷீத் மசூத்துக்கு (67) டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 4ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது
.1990-ஆண்டு வி.பி.சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவையில்சுகாதார அமைச்சராக ரஷீத் மசூத் பதவி வகித்தார். அப்போது திரிபுராமாநிலத்துக்கு ஒதுக்கப்பட்டிருந்த மருத்துவ மாணவர் சேர்க்கைக்கானமத்திய அரசின் இடங்களில் தகுதியில்லாத மாணவர்கள் சேர்ந்து படிக்கஅவர் முறைகேடாக அனுமதி அளித்தார். இதில், இருவர் ரஷீத்தின்உறவினர்கள்.
ரஷீத் மசூத் மீது ஊழல் தடுப்புச் சட்டம், இந்திய தண்டனைகள் சட்டப் பிரிவு 120 பி (குற்றச் சதி), 420 (ஏமாற்றுதல்), 468 (மோசடி) உள்ளிட்டவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் அவர் குற்றவாளி என கடந்த செப்டம்பர் 19- தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.பின்னர், அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
No comments:
Post a Comment