Sunday 13 October 2013

கால பெட்டகம் . . . 30.08.1985.


கம்யூனிசம் நல்ல வாழ்க்கைக்கு உத்தரவாதம் செய்யும்
-
நெல்சன் மண்டேலா
தென்னாப்பிரிக்காவில் சமா தானப்பூர்வமான போராட்டம் சாத்தியமல்ல என்றும் வெள்ளை நிற வெறி ஆட்சியை ஒழித்துக் கட்ட ஆயுதந்தாங்கிய போராட்டம்தான் ஒரே வழி என்றும் சிறையில் வாடும் கறுப்பு இன மக்களின் தலைவர் நெல்சன் மண்டேலா கூறினார்.கம்யூனிச சமுதாய அமைப்பையே, தான் மிகவும் நேசிப்பதாக வும் மண்டேலா கூறினார். தான் ஒரு கம்யூனிஸ்ட் அல்ல என்றும் அவர் தெரிவித்தார். ஆனால் கம்யூனிசம் எல்லோருக்கும் நல்ல வாழ்க்கைக்கு உத்தரவாதம் செய்யும். யாவருக்கும் சம வாய்ப்பையும் அளிக்கும் என் றும் அவர் தெளிவுபடுத்தினார். தடைசெய்யப்பட்ட ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் (ஏஎன்சி) ஆயுட் காலத் தலைவரான மண்டேலாவாஷிங்டன் டைம்ஸ்என்ற பத்திரிகைக்கு பேட்டியளித்தார். 23 ஆண்டுகாலமாக அவர் சிறையில் இருந்து வருகிறார். தென்னாப்பிரிக் காவில் மிகப்பெரும்பான்மை இனத் தினரான கறுப்பு இன மக்கள் தங்களின் உண்மையான தலைவராக மண்டேலாவை கருதுகிறார்கள். சமாதானப்பூர்வமான போராட்டம், நிறவெறி ஆட்சியில் செய்யப் படும் சில மாறுதல்கள் என்பவை யெல்லாம் சுத்த மோசடியாகும். ஒரு புரட்சியைத் தவிர தென்னாப் பிரிக்காவுக்கு மாற்றுவழி இல்லை என்றும் அவர் வாஷிங்டன் டைம்ஸுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
தென்னாப்பிரிக்காவில் அன்னிய நிறுவனங்களின் முதலீடு களை, தான் முழுமையாக எதிர்ப்ப தாகவும் மண்டேலா நினைவுப்படுத்தினார்.விடுதலைக்கு தியாகங்கள் தவிர்க்கமுடியாத தேவையாகும் என்றும் மேலும் தியாகங்கள் செய்ய ஏஎன்சி போராளிகள் முன்வர வேண்டும் என்றும் அவர் கூறினார்.சிறையிலிருந்து விடுதலைபெறு வதற்காக ஆயுதப் போராட்டத்தை கண்டிக்க, தான் தயாரல்ல என்றும் அவர் மீண்டும் வலியுறுத்திக் கூறி னார். ஒரு வேளை தான் சிறையி லிருந்து விடுதலை செய்யப்பட்டால் கூட அடுத்த சில மணிநேரத்திற்குள்ளேயே மீண்டும் சிறையில் தள்ளப்படலாம். தன்னால் கையைக் கட்டிக் கொண்டு வெறுமனே இருக்க முடியாது.ஆயுதம் தாங்குவதைத் தவிர வேறு என்ன வழியிருக்கிறது? சமா தானப்பூர்வமான போராட்டம் பொருந்தாது. 20 ஆண்டு காலமாக தென்னாப்பிரிக்காவிலே கறுப்பு இன மக்களின் வாழ்க்கை நிலைமை யில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. நிலைமை மேலும் மோசமாகியிருக் கிறது என்று ஏஎன்சி தலைவர் சுட்டிக்காட்டினார்.நிறவெறி ஆட்சிக்கு முடிவு கட் டப்படும் வரை பிரிட்டோரியா ஆட்சியாளர்களுடன் நெல்சன் மண்டேலா பேச்சுவார்த்தை நடத்த மாட்டார் என்று அவரது மனைவி வின்னி மண்டேலா கூறினார்.
கடந்த வியாழக்கிழமை ஜோகன்ஸ்பர்க்கில் நிருபர்களிடம் அவர் பேசினார். வெள்ளை சிறுபான்மை இனத்தவரி டமிருந்து மிகப் பெரும்பான்மை இனத்தவரான கறுப்பு இன மக்க ளுக்கு அதிகாரம் மாற்றப்படுவது சம்பந்தமான பேச்சுவார்த்தையில் மட்டுமே அவர் கலந்து கொள்வார் என்று வின்னி மண்டேலா தெளிவு படுத்தினார்.

No comments: