புகைபிடித்தால் ஆயுளில் 10 வயது குறையும்
புகைபிடிப்பவர்களுக்கு ஏற்படும் அபாயம் குறித்து நாம் நினைத்ததைவிட மோசமான விளைவுகள் ஏற்படும் என ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர் எச்சரித்துள்ளார்.20மற்றும் 30 வயதுகளில் சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை விடுபவர்களுக்கு அபாய பாதிப்பு 90 சதவீதம் குறைகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழக சுகாதா ரத்துறை நிபுணர் எமிலி பிளா ங்ஸ் கூறுகையில், தற்போது ஏற் படுகிற 3ல் 2மரணங்கள் புகைப் பிடிப்பவர்களுக்கே ஏற்படுகிறது என்றார். இந்த ஆய்வாளர் தலைமையிலான குழு ஆஸ்திரேலியாவில் 2லட்சம் பேரிடம் ஆய்வை நடத்தியது.புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் தங்களது வாழ்நாளில் 10 வயதை தொலைப்ப வர்களாக உள்ளனர் என்றும் இந்த ஆய்வுக்குழு எச்சரித்துள் ளது.
ஒரு நாளைக்கு 10 சிக ரெட்டுகளை புகைபிடிக்கும் பழக்கம்உள்ளவர்களுக்குஅபாய காரணி இரு மடங்காகிறது. நாள் ஒன்றுக்கு 25 சிகரெட்டுகள் பிடிப்பவர்களுக்கு அபாயஅளவு 4மடங்காக அதிகரிக்கிறது. சிகரெட் பழக்கத்தை கை விடுபவர்களுக்கு அபாய காரணிகள் வெகுகுவாக குறைகின்றன.
No comments:
Post a Comment