அமெரிக்காவின்
ஆக்கிரமிப்பிற்கு
பிறகான எட்டாண்டு காலத்தில் மட்டும் வன்முறையின் காரணமாக சுமார் 4 லட்சத்து 60 ஆயிரம் இராக்கியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாகக் கூறி கடந்த 2003ம் ஆண்டில் ஈராக் மீது அமெரிக்க போர் தொடுத்தது. இப்போரில் ஆயிரக்கணக்கான இராக்கிய மக்களை அமெரிக்க ராணுவம் கொன்று குவித்தது.இதன்பின், அந்நாட்டு அதிபர்சதாம்உசைனை பிடித்து, கண்துடைப்பிற்காக நீதிமன்றத்தில் நிறுத்தி அவருக்கு மரணதண்டனை விதித்து தூக்கிலேற்றிக் கொன்றது. இதன்பிறகு, ஒருபொம்மை ஆட்சியை நிலைநிறுத்தியும், தனது படைகளை குவித்தும் அதிகாரத்தை செலுத்தி வருகிறது அமெரிக்கா. இப்போர் முடிவுற்று 10 ஆண்டுகள் கடந்த பிறகும் தற்போது வரை அந்நாட்டில் அமைதி திரும்பவில்லை. நாள்தோறும் அந்நாட்டில் குண்டு வெடிப்பு நிகழ்வுகள் நடைபெறுவது என்பது வழக்கமான நிகழ்வாக மாறியுள்ளது. இத்தாக்குதலில் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவின் ஆக்கிரமிப்பிற்கு பிறகான 2003ம் ஆண்டு முதல் 2011 வரையிலான 8 ஆண்டு காலத்தில் மட்டும் அந்நாட்டில் 4 லட்சத்து 60 ஆயிரம் இராக் மக்கள் வன்முறையால் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளன.இதுதொடர்பான ஆய்வை வாஷிங்டன் பல்கலைக்கழகம், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், சைமன் ப்ரேசர் பல்கலைக்கழகம் மற்றும் முஸ்தான்சிரியா பல்கலைக்கழகம் ஆகியவை மேற்கொண்டது. இதில் இராக் நாட்டின் 8 மாகாணங்களில் உள்ள 100க்கும் மேற்பட்ட நகரங்களில் வசித்து வரும் 2000க்கும் மேற்பட்ட குடும்பத்தாரிடம் ஆய்விற்கான தகவல்கள் திரட்டப்பட்டன இதன்படி, கடந்த 2003ம் ஆண்டிலிருந்து 2011ம் ஆண்டிற்குள் மட்டும் சுமார் 4 லட்சத்து 60 ஆயிரம் ஈராக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் 60 சதவிகிதத்தினர் நேரிடையாக வன்முறை தாக்குதல்களினால் பலியானவர்கள். மற்றவர்கள் இத்தகைய தாக்குதல் நடவடிக்கையால் ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தது உள்ளிட்ட மறைமுக வன்முறை செயல்களால் உயிரிழந்துள்ளனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், இத்தகைய வன்முறை சம்பவங்கள் நிகழும்போது, மருந்து, உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்கி பயன்படுத்த முடியாமல், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை சேர்த்தால் பலியானோர் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.இதனிடையே, இவ்வாண்டு ஜனவரி மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம் வரை சுமார் 5 ஆயிரம் பேர் குண்டுவெடிப்பு உள்ளிட்ட வன்முறைநிகழ்வுகளால்இராக்கில் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை என்பதுகடந்தாண்டு இக்காலகட்டத்தில் நிகழ்ந்த உயிரிழப்புஎண்ணிக்கையை காட்டிலும் 3 ஆயிரம் வரை அதிகமாகும் எனஐக்கியநாடுகள்சபை தெரிவித்துள்ளது. மேலும்,கடந்தசில வருடங்களாகஒவ் வொருஆண்டும்செப்டம்பர் மாதத்தில் மட்டும் வன்முறை சம்பவங்க ளால் குறைந்தது 1000 பேர் வரைஉயிரிழப்பதாகவும், 2000 பேர்வரை படுகாயமடைவதாகவும் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட் டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.வியாழனன்று இராக் நாட்டின் வடக்கு மாகாணமான நைன்வா பகுதியில் தற்கொலை படை பயங்கரவாதிகள் லாரியுடன் சென்றுகுண்டுவெடிப்பு தாக்குதலை நடத்தினர். அதிகாலை 6 மணியளவில் நிகழ்த்தப்பட்ட இந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment