விமான நிலைய ஊழியர்கள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
சென்னை சர்வதேச விமான நிலையத்தை தனி யார்மயமாக்குவதைக் கண்டித்து போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்த போராட்டத்தின்போது விமான நிலைய ஆணையகத்தின் 400 ஊழியர்கள் கறுப்பு உடை அணிந்து தங்கள் எதிர்ப்பைக்காட்டினர். அவர்கள் உள்நாட்டு விமான நிலையத்தில் முற்றுகையிட்டார்கள். மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப்படையினரின் எதிர்ப்பையும் மீறி அவர்கள் விமான நிலையத்தின் மையப் பகுதிக்குள் நுழைந்தார்கள்.
பின்னர் அவர்கள் வாசல் முன்பாக அமர்ந்து தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.இந்திய விமானநிலைய ஆணையகத்தின் உள் கட்டமைப்பின் தலைவர் அனுஜ் அகர்வால் அப்போது உள்ளே நுழைய முயன்றபோது அவரை உள்ளே செல்லவிடாமல் போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினர். அப்போது பதற்றம் ஏற்பட்டது. பாதுகாவலர்கள் உதவிடன் அந்த அதிகாரி வேகமாக உள்ளே நுழைந்தார். திங்களன்று விமானநிலைய ஆணையகத்தின் 4 அதிகாரிகள் தில்லியில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்தனர்.அப்போது அவர்கள் ஊழி யர்களின் பணிக்கு பாதிப்பு வராது என உறுதியளித்தனர். மேலும் விமான நிலையத்தில் ஏலத்திற்கான துவக்க கட்ட ஏற்பாடுகளை பார்வையிடவும் அவர்கள் வந்திருந்தனர்.தனியாரிடம் தாரை வார்ப்பதற்கு விமான நிலையத்திற்கு ரூ2ஆயிரத்து 15 கோடி செலவிடுவது ஏன்? என்று ஊழியர்கள் சங்கத்தினர் கேள்வி எழுப்பினர்.சென்னை விமான நிலையத்தை தனியார் கைகளில் தருவதால் அதனைபயன் படுத்தும் விமானங்களுக்கான பயன்பாடு கட்டணத்தை அந்த நிறுவனம் வசூலிக்கும்.சென்னை விமான நிலையத்தை தனியார் கைகளுக்கு செல்லாமல் தடுக்கவேண்டும் என ஊழியர் சங்கத்தினர் மாநில அரசை அணுகிஇருக்கிறார்கள்.இந்திய விமான நிலைய ஆணையகம் அகமதாபாத், கொல்கத்தா மற்றும் கவுகாத்தி விமான நிலையங்களையும் தனியாரின்கைகளுக்கு தரவேண்டும் என துடித்துக் கொண்டிருக்கிறது.
No comments:
Post a Comment