இந்தியப் பெரும்முதலாளிகளும் மதவெறி சக்திகளும் நரேந்திர மோடியை ஒரு வர்த்தகச் சரக்காக்கி யிருக்கிறார்கள் என்று சீத்தாராம் யெச்சூரி கூறினார். “இந்திய அரசியலில் இன்று ஒரு ஆபத்தான அம்சம் உருவாகி வருகிறது. அப்பட்டமான முறையில் மதவெறி உணர்வு கிளறிவிடப்படுகிறது.ராமர் கோயிலும் காஷ்மீருக்கு சிறப்பு நிலை அளிக்கும் 307வது சட்டப்பிரிவு நீக்கமும், அனைவருக்கும் ஒரே மாதிரியான சமூகச் சட்டமும் தங்கள் கட்சியின் அடிப்படையான நோக்கங்கள் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை என்று பாஜக தலைவர் வெளிப்படையாகவே பேசுகிறார்.இன்னொரு பக்கத்தில் இந்தியாவின் கார்ப்பரேட் உலகம் மோடியை நாட்டின் பொருளாதாரத்தைக் காக்க வந்த ரட்சகராகக் காட்டுகிறார்கள்.
மோடியை ஒரு சந்தைச் சரக்காகக் கையாளுகிறார்கள். கிட்டத்தட்ட பல ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் மோடி பெயரை முன்வைப்பதன் பெயரால் நடப்பதாகக் கூறப்படுகிறது.1930களில் இனவெறி கிளப்பிவிடப்பட்டது போலவே 2013ல் இங்கு மதவெறி கிளப்பிவிடப்படு கிறது.மதவெறியர்களுக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும் இடையேயான கூட்டு என்ற இந்தச் சவாலை முறியடிப்பது சமுதாய நிலைமைகளை மாற்றுவதற்கான ஒரு முக்கியத் தேவை.
இதை எதிர்கொள்கிற அரசியல் உறுதி காங்கிரசிடம் இல்லை. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவை இடதுசாரிகள் விலக் கிக்கொண்டபோது, அதற்குக் காரணமான பொருளாதாரக் கொள்கைகளைச் செயல்படுத்திய பிரதமர் மன்மோகன் சிங், இந்தியாவில் மாற் றங்கள் நிகழ அந்தக் கொள்கைகள் அவசியம் என்றார்.
ஆனால் இந்த ஐந்து ஆண்டுகளில் ஏற்பட்டிருக்கிற ஒரே மாற்றம் சங்கிலித் தொடர்போன்ற ஊழல்கள் மட்டுமே. ஆகவே இந்தியாவுக்கு இப்போது தேவைப்படுவது மாற்றுத் தலைவர் அல்ல, மாற்றுக் கொள்கைகளே.இவ்வாறு யெச்சூரி கூறினார்.
No comments:
Post a Comment