Tuesday 8 October 2013

முதல் தமிழ் முதலமைச்சரான நீதிபதி சி.வி.விக்னேஸ்வரன்..

இலங்கையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தமிழ் முதலமைச்சரான நீதிபதி சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு மாகாண முதலமைச்சராக திங்களன்று கொழும்புவில் உள்ள ஜனாதிபதியின் இல்லமானடெம்பிள் ட்ரீஸ்மாளிகையில் ஜனாதிபதி மகிந்தா ராஜபக்சே பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.இலங்கை உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான விக்னேஸ்வரன், கடந்த செப்டம்பர் 21ம்தேதி இலங்கை வடக்கு மாகாணத்திற்கு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு (டிஎன்ஏ) மாபெரும் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து வடக்குமாகாணத்தின் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். 25ஆண்டுகள் கழித்து முதல் முறையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆட்சி வடக்கு மாகாணத் தில்அமைந்துள்ளது.தேர்தல் வெற்றியைத்தொடர்ந்து வடக்குமாகாண முதலமைச்சர் பதவிக்கு விக்னேஸ்வரனை கடந்த அக்டோபர் 1ம் தேதி வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி நியமித்தார்.ஜனாதிபதியின் மாளிகையில் நடைபெற்ற எளிய பதவியேற்பு நிகழ்ச்சியில்விக்னேஸ்வரன், அவரதுகுடும்பத்தினர், தமிழ்தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைவர் ஆர்.சம் பந்தன் உள்ளிட்ட நிர்வாகிகள், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதமர் டி.எம்.ஜெயரத்ன, ஆளுநர் சந்திரசிறி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஜனாதிபதி ராஜபக்சே வந்ததும், அவர்முன்னிலையில் விக்னேஸ்வரன் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார். பின்னர் வடக்குமாகாண முதலமைச்சராக நியமிக்கப்படும் பத்திரத்தில் விக்னேஸ்வரனும், ராஜபக்சேவும் கையெழுத்திட்டனர். விக்னேஸ்வரனுக்கு ராஜபக்சே கைகொடுத்து வாழ்த்து தெரிவித்தார். பிரதமரும் இதர தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித் தனர்.முன்னதாக பதவியேற்பு நிகழ்ச்சியை ஜனாதி பதியின் இல்லத்தில் வைத்து நடத்துவது என்ற ராஜபக்சே அரசின் முடிவுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சிலதலைவர்களும் ஆதரவாளர்களும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

No comments: