Saturday 26 October 2013

கான்ரக்ட்காரர்கள் இழுத்தடிக்கும் போக்கை கண்டித்து ...

அருமைத்தோழர்களே!அனைவருக்கும் வணக்கம்...
மதுரைமவட்டத்தில் பணி செய்யும் ஒப்பந்த ஊழியர்களுக்கு பிரதிமாதம் 7 தேதிக்குள் EPF/ESI உள்ளிட்டு முறையாக சம்பளம் வழங்குவதில் சமிபகாலமாக இழுத்தடிக்கும் போக்கை கான்ரக்ட்காரர்கள் கடைப்பிடிப்பதை கண்டித்தும்,26.06.2013 முத்தரப்பு ஒப்பந்தப்படி போனஸ் வழங்ககோரியும்  25.10.2013 வெள்ளியன்று BSNLEU + TNTCWU இரண்டு மாவட்டசங்கங்கள் இணைந்து மதுரை GM அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தோழர்கள்,S.மானுவல் பால்ராஜ்,K.வீரபத்திரன் கூட்டுத் தலைமை ஏற்று நடத்தினர்.மாநிலசங்க நிர்வாகிகள் தோழர்கள்,C.செல்வின் சத்தியராஜ்,அன்பழகன்,மாவட்ட சங்க நிர்வாகிகள்,N.சோணைமுத்து,S.சூரியன்,V.சுப்புராயலு ஆகியோர் உரைஆற்றினர்.

ஆர்ப்பாட்டத்தை ஒட்டி மாவட்ட நிர்வாகத்துடன் DGM(HR),DGM(F&A) ஆகியோர் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.மாவட்டநிர்வாகம் எடுத்த நல்ல முயற்சி அடிப்படையில் போராட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது.ஆர்ப்பாட்டத்தில் 18 பெண்கள் உட்பட 100 க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டது நல்ல அம்சம்.   





No comments: