Friday, 18 October 2013

நடக்கும் குற்றங்களில் கேரள மாநிலம் முன்னிலை...

இந்தியாவில் நடக்கும் குற்றங்களில் கேரள மாநிலம் அதிகப்புள்ளிகளை பெற்று முன்னிலை வகிக்கிறது. கல்வி முதல் பல்வேறு விஷயங்களில் முதலிடம் பிடிக்கும் இந்த கேரள மாநிலம் அதிக குற்றச்சசெயல்கள் புரிவதிலும் இப்பகுதி மக்கள் முதலிடத்தை பிடித்துள்ளனர். நகரம் வாரியாக எடுக்கப்பட்ட சர்வேயிலும் இங்குள்ள கொச்சி நகரமே முன்னிலை பெற்றுள்ளளது. சராசரி கணக்கெடுப்பு விவரத்தின்படி டில்லி, குஜராத், மத்திய பிரதேசம், கர்நாடகா, ஆந்திரா, சட்டீஸ்கர், அருணாசல பிரதேசம், தமிழ்நாடு ஆகியவைகளும் அதிக புள்ளிகள் பெற்றுள்ளது.நாட்டில் நடைபெறும் குற்றங்கள் குறித்த கணக்கெடுப்பு, பல விஷயங்களுக்கு அவசியமாகிறது. குற்றத்தடுப்பு, கண்காணிப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை போன்றவைகள், குற்றங்களின் எண்ணிக்கை, அவை நடக்கும் முறை ஆகியவற்றின் அடிப்படையில் எடுக்கப்படுகின்றன. இப்பணியில், தேசிய குற்ற ஆவண காப்பகம் ஈடுபட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்தில் உளள குற்ற ஆவண காப்பகங்களில் இருந்து குற்றங்கள் குறித்த தகவலை இந்த அமைப்பு பெறுகிறது. இந்த வகையில், கடந்த 2012ம் ஆண்டுக்கான புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.நாட்டிலேயே அதிகமான குற்றங்கள் நடக்கும் மாநிலம் என்ற இடத்தை கேரளா பெற்றுள்ளது. ஒரு லட்சம் மக்கள் தொகையில், 455 குற்றச் செயல்கள் அங்கு நடந்துள்ளன. இது, நாட்டின் சராசரி குற்றச்செயல்கள் எண்ணிக்கையை ஒப்பிடும் போது இரண்டு மடங்கு அதிகமாகும். நாகாலாந்து மாநிலத்தில் தான், நாட்டிலேயே மிகவும் குறைவான எண்ணிக்கையில் குற்றங்கள் நடந்துள்ளன. இங்கு, 47 என்ற அளவில் குற்றங்கள் பதிவாகி உள்ளன.இந்த வகையில், ஆந்திரா 224, கர்நாடகா 222, .பி., 298, தமிழ்நாடு 294, . குஜராத் 216, புதுச்சேரி 291, .பி., 96, ஜம்மு காஷ்மீர் 206, மத்திய பிரதேசம் 298, மகாராஷ்ட்டிரா 176, மணிப்பூர் 150, மேகாலயா 96, பஞ்சாப் 127, டில்லி 283 , சண்டிகார் 235 புள்ளிகள் பெற்றுள்ளன.
நகரங்கள் வாரியாக விவரம்:
நகரங்களில் நடந்த குற்றங்கள் குறித்த புள்ளி விவரங்களின்படி, கொச்சியில் தான் அதிகபட்சமாக 817 சம்பவங்கள் நடந்துள்ளன. சென்னை 228 குற்றச்செயல்களும், பெங்களூரூ 344 , கோவை 481, குவாலியர் 686, ஐதராபாத் 206, ஜெய்ப்பூர் 607, கோல்கட்டா 179, லக்னோ 315, மும்பை 165, பாட்னா 525, ஸ்ரீநகர் 205, திருவனந்தபுரம் 429, மதுரை 223, நாசிக் 280 குற்றச்செயல்கள் நடந்துள்ளன.

ஒரு லட்சம் பேருக்கு எத்தனை குற்றங்கள் நடந்துள்ளன என்ற அடிப்படையில் இந்த தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது

No comments: