Thursday 14 January 2016

டென்னிஸ் 22 ஆண்டுகால உலக சாதனையை முறியடித்த சானியா-ஹிங்கிஸ்.

சிட்னி : டென்னிஸ் இரட்டையர் பிரிவு தரநிலையில் முதலிடத்தில் உள்ள இந்தியாவின் சானியா மிர்சா சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி, தொடர்ச்சியாக 29 போட்டிகளில் வெற்றி பெற்று புதிய உலக சாதனை படைத்துள்ளது. சிட்னியில் நடைபெற்று வரும் சர்வதேச டென்னிஸ் தொடரின் அரையிறுதியில் சானியா-ஹிங்கிஸ் ஜோடி, ரோமானியாவின் ரலுகா-கஜகஸ்தானின் யாரோஸ்லவா ஜோடியை 4-6, 6-3, 10-8 என்ற செட்கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. தொடர்ச்சியாக 29-வது வெற்றியை குவித்த இந்த இணை, உலகில் அதிக போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற இரட்டையர் ஜோடி என்ற உலக சாதனையை படைத்தது. இதற்கு முன்னர், கிகி பெர்னாண்டஸ்-நடாஷா சுவரேவா ஜோடி 28 போட்டிகளில் வெற்றி பெற்றதே சாதனையாக இருந்தது. இந்த சாதiயை 22 ஆண்டுகளுக்குப் பிறகு சிட்னி தொடரில் சானியா ஜோடி தகர்த்துள்ளது. நமது வாழத்துக்கள் உரித்தாகட்டும்.

No comments: