Saturday, 23 January 2016

மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாள்...

இந்தியத் திருநாட்டை 200 ஆண்டுக் காலம் அடிமைத் தளையால் பிணைத்திருந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து இராணுவ ரீதியாக போராடிய ஈடிணையற்ற இந்தியத்தலைவர் மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 119 வது பிறந்த நாள் இன்று - ஜனவரி 23, 1897 இந்திய விடுதலை போராட்டத்தின் இறுதி கட்டத்தில், இரண்டாவது உலகப் போர் ஏற்பட்டிருந்த அன்றைய உலக சூழலை கருத்தில் கொண்டு, சர்வதேச சக்திகளின் துணையுடன் அன்னிய மண்ணில் களம் அமைத்து அவர் நடத்திய விடுதலை போர் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை கதிகலங்க அடித்தது. அமைதியான, சாத்வீகப் போராட்டங்களால் மட்டுமின்றி, ஆயுதம் தாங்கிய புரட்சி வழியில் இந்தியாவிற்கு உள்ளேயும், வெளியேயும் நடத்தப்பட்ட தாக்குதல்களால் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு நெருக்கடி ஏற்படுத்தியவர் போஸ்! இந்தியாவிற்கு இப்படியும் போராடத் தெரியும் என்பதை உலகத்திற்கு உணர்த்தியவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.

No comments: