Monday 11 January 2016

டெல்லியில் BSNLMRS திட்ட மறுசீராய்வு கமிட்டி கூட்டம் . . .

BSNLMRS திட்ட மறுசீராய்வு கமிட்டியின் முதல் கூட்டம், 08.01.2016 அன்று புதுடில்லியில், BSNL தலைமையகத்தில்,  நடைப்பெற்றதுஅதில், ஊழியர் தரப்பு சார்பாக ,
01. தோழர். P . அபிமன்யூ, பொது செயலர், BSNLEU
02. தோழர். சந்தீஸ்வர் சிங், பொது செயலர், NFTEBSNL
நிர்வாக தரப்பில்,
01. திரு. S .K .சின்ஹா, GM (ADMN )
02. திரு. ராம் சக்ஹல், GM (SR )
03. திரு. S .H .ராவ், DGM (EF )

04. திரு. சுலே, DM ஆகியோர் கலந்து கொண்டனர்நமது பொது செயலர் கூட்டத்தில் ஊழியர் சந்திக்கும் கிழ்க்கண்ட பிரச்சனைகளை, நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
() CGHS கட்டணங்கள் மிக குறைவாக உள்ளதால், முன்னணி மருத்துவமனைகள், நமது திட்டத்தில் இணைய மறுக்கிறார்கள். அதனால், மருத்துவ சிகிச்சைகளுக்காக, ஊழியர்கள் கையிலிருந்து நிறைய செலவு செய்ய வேண்டியுள்ளது.
() BSNL நிறுவனம், நிதி நெருக்கடியில் உள்ளதால், பில்கள் பட்டுவாடா செய்வதில், கால தாமதம் ஏற்படுகிறது. அதனால், நல்ல மருத்துவமனைகள் நம்மோடு, உடன்பாடு எட்ட மறுக்கிறார்கள்.இந்த பிரச்சனைகளுக்கு, தீர்வு காண, வழி வகை செய்ய வேண்டும் என நமது பொது செயலர் வலியுறுத்தினார்.  
ஆழமான, விவாதங்களுக்கு பின், கிழ் கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது.
01. COAL India, SBI,BHEL போன்ற பொது துறைகளில் உள்ள மருத்துவ திட்டங்கள் பரிசீலிக்கபடும்.
02. BSNL நிறுவனம்மருத்துவ காப்பீட்டு திட்டத்தில், சேருவது சம்மந்தமாக பரிசீலிக்கபடும்.
03. நிலுவையில் உள்ள, மருத்துவ பில்கள் விரைந்து பட்டுவாடா செய்ய, தலைமையகம், மாநில நிர்வாகங்களை அறிவுறுத்தும்.
04. அடுத்த கூட்டம் 2016 பிப்ரவரி கடைசி வாரத்தில் நடத்தப்படும்
--- என்றும் தோழமையுடன், எஸ். சூரியன், மாவட்ட செயலர்.BSNLEU.

No comments: