தோழர்.என். வரதராஜன் (பிறப்பு:1924, இறப்பு:ஏப்ரல்10,2012)
மார்க்சிஸ்ட்கட்சியின் முன்னாள் தமிழ் மாநிலச் செயலாளரும் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும் ஆவார்.இவர்திண்டுக்கல்மாவட்டம்வேடசெந்தூர்தாலுகாவில் பாளையம் அருகே உள்ள கம்பிளியம்பட்டியில் பிறந்தார். திண்டுக்கல்லில் பஞ்சாலைத் தொழிலாளியாக தனது வாழ்க்கையை துவக்கினார். இவருக்கு ஜெகதாம்பாள் என்ற மனைவியும், கல்யாணசுந்தரம், பாரதி ஆகிய மகன்களும் உள்ளனர். கல்யாணசுந்தரம் துணைத்தலைவராக பணியாற்றியவர்மார்க்சிஸ்ட் கட்சியின் CITU தொழிற்சங்கத்தில் இணைந்து அரசியலில் ஈடுபட்டார். அந்தக் கட்சியின் மாநிலச் செயலாளராகவும், தேசிய செயற்குழு உறுப்பினராகவும்இருந்தவர்.1954-ல்மதுரைஜில்லாபோர்டுஉறுப்பினராகவும், 1967ம் ஆண்டு வேடசெந்தூர்தொகுதியில் இருந்து சட்டப்பேரவை உறுப்பினராகத்தேர்ந்தெடுக்கப்பட்டார்.பின்னர்1977 மற்றும்1980 ஆண்டுகளில்திண்டுக்கல் தொகுதியிலிருந்து சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.1943ல் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட அவர் பின்பு 1964-ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதயமான போது அதில் தன்னை இணைத்துக் கொண்டு மதுரை மாவட்டச்செயலாளராக,மாநிலக்குழுஉறுப்பினராக,மத்தியக்குழுஉறுப்பினராகபணியாற்றியவர். 2001லிருந்து 2010 வரை மூன்று முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுசிறப்பாகபணியாற்றியவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய பலகட்ட போராட்டங்களில் பங்கேற்றும், தலைமையேற்றும் மூன்று ஆண்டுகள் சிறை வாழ்க்கை அனுபவித்தார். கட்சியின் மீது அடக்குமுறை ஏவப்பட்ட காலத்தில் இரண்டு ஆண்டுகள் தலைமறைவாக இருந்து கட்சிப் பணியாற்றியவர். தமிழகத்தில் உள்ள சாதாரண ஏழை, எளிய மக்களின் சமூக மேம்பாட்டிற்காகவும், தீண்டாமைக் கொடுமையை எதிர்த்தும் போராடியும், மதுரை, உத்தப்புரம் தீண்டாமைச் சுவரை அகற்ற பாடுபட்டவர். இந்தப் போராட்டங்களுக்கு தலைமையேற்று நடத்தியவர்.
அருந்ததிய மக்களின் இடஒதுக்கீட்டுக்கான போராட்டம்
அருந்ததிய மக்களுக்கு 3 சதவிகிதம் உள் இடஒதுக்கீடு வழங்கிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடியது. இந்தப் போராட்டத்திற்கு தலைமையேற்று வழி நடத்தியவர். இப்போராட்டத்தின் காரணமாகவே தமிழக அரசு அருந்ததிய மக்களுக்கு 3 சதவிகித உள்இடஒதுக்கீடு வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது 2012 ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதியன்று காலமானார்.இந்நாளில் அன்னாரது நினைவை போற்றுவோம்.
No comments:
Post a Comment