1920 ஏப்ரல் மாதம் 22ல் மாஸ்கோ நகரத்தில் ஒரு தலைவர், தனக்கு பிறந்த நாள் கொண்டாடுவது கூடாது என்று உத்தரவிட்டார். அதையும் மீறி ஆயிரமாயிரம் தொழிலாளர்கள் தலைவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூட்டம் நடத்தினர். உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் மாக்ஸிம் கார்க்கி அக்கூட்டத்தில் “சில மனிதர்களைப் பற்றி பேசுவது எளிதன்று. அவர்களுடைய சிறப்புகளையும் குறிப்பிடுவது இயலாது. நான் சொல்லோவியம் தீட்டுவதில் வல்லவன் என்றாலும் அவருடைய உருவத்தை உங்கள் முன் சித்தரிக்க சரியான சொற்கள் கிடைக்காமல் தவிக்கிறேன்” என்றார்.
1893ல் குடியானவர்களின் வாழ்க்கையில் புதிய மறு மலர்ச்சி என்ற முதல் கட்டுரையையும் வெளியிட்டார் லெனின். அப்போது அவருக்கு வயது 23தான்.ஒரு சமயம் தன்னை சந்திக்க வந்த மனைவி (குரூப்ஸ்கயா)யிடம் ரகசிய செய்தியை சொல்ல வேண்டும். எப்படி சொல்வது என்று சிந்தித்தார். மனைவியிடம் உரையாடினார் கீழ்க்கண்டவாறு ‘எனக்கு கொடுத்த நூல்களை கொடுத்துவிட்டேன். தங்கை மரியாவின் நூலையும், அறை எண் தெரியுமா?’ என கேட்டவுடன் குரூப்ஸ்கயா, 193 என்றார். ஆனாலும் சம்பந்தமில்லாமல் பேசுவது அப்போது புரியவில்லை. ஏதோ மர்மம் இருக்கிறது என உணர்ந்த குரூப்ஸ்கயா, தங்கை மரியாவிடம் உள்ள நூல் பக்கம் 193ஐ புரட்டினார். அதில் தொழிலாளர்களுக்கு விநியோகிக்க வேண்டிய ரகசிய சுற்றறிக்கை செய்தி இருந்தது. இப்படியாக எதிரிவர்க்கத்தினை ஏமாற்றி, தனது வர்க்கத்தினை தன் தந்திரத்தால் வழி நடத்தியது என இது போன்ற பல உதாரணங்கள்.
புரட்சி வெற்றி பெற்ற நேரத்தில் லெனின் அறைக்கு இரு தொழிலாளர்கள் அவரை சந்திக்க வந்தனர். லெனினின் செயலாளர் அவர்களை அழைத்துச் சென்றார். அமைச்சரவை தலைவரான லெனினின் சாதாரண அறையை பார்த்து வியந்தனர். தன்னைப் பார்க்க வந்தவர்களை சந்திக்க வந்த லெனின், அவருடைய அதிகாரப்பூர்வ இருக்கையில் அமராமல் நேரடியாக தொழிலாளர்களின் பக்கத்தில் வந்தமர்ந்து, என்ன விசயம் என கேட்டார். சந்திக்க வந்தவர்கள் லெனினின் அடக்கத்தை பணிவை கண்டு வியந்தனர். தாங்கள் சொல்ல வந்த விஷயத்தை சொல்லத் தயங்கினர். இருந்த போதும் என்ன விசயம் என கேட்டார். தொழிலாளர்கள், நாங்கள் தொழிற் சாலைகளில் பணிபுரியவே அனுபவம் மிக்கவர்கள். எங்களால் அமைச்சரவை அலுவலகத்தில் பணிபுரிய முடியாது என மறுத்தனர். ஆனால் லெனின், தோழர்களே நமக்கு நம்பிக்கையான ஆள் அமைச்சரவை செயலகத்திற்கு தேவை. நாம் பழைய அமைச்சரவை அமைப்பை உடைத்துவிட்டோம். இப்போது இருப்பது புதிய அமைப்பு. இதற்காகத் தான் நாம் போராடினோம். இங்கே நாம்தான் பணியாற்ற வேண்டும். நாம் கற்றுக் கொள்ளலாம். பணியாற்ற சிரமம்தான். தவறு செய்தால் திருத்திக்கொள்வோம். இல்லையெனில் கற்றுக்கொள்வோம். அமைச்சரவை தலைவர் என்ற முறையில் கற்றுக்கொள்ளுங்கள் என கூறாமல், கற்றுக்கொள்வோம் என லெனின் தன்னடக்கத்துடன் கூறியது, சந்திக்க வந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது. பின்னர் அவர்கள் அமைச்சரவை அலுவலகத்தில் பணிபுரிய ஒப்புக்கொண்டனர்.
எதிர்ப்புரட்சியாளர்கள் லெனினை குறிவைத்து தாக்க திட்டமிட்டனர். முதலில் 1918 ஜனவரி 1ல் காரில் வந்த போது லெனினை நோக்கிச் சுட்டனர். அருகில் இருந்த சுவிஸ் கம்யூனிஸ்ட் தலைவர் பிளாட்டன், லெனின் தலையை அமுக்கி காப்பாற்றினார். பிளாட்டன் கையை துப்பாக்கி ரவை பதம் பார்த்தது. லெனின் மயிரிழையில் உயிர்தப்பினார். இந்த நிகழ்ச்சிக்கு பின்பு கூட தன்னுடைய பணியில் எந்தவித தொய்வும் இன்றி பணியாற்றினார்.

லெனின்பற்றியும்,ரஷ்ய புரட்சியைப் பற்றியும்வருணிக்க முனைந்த மகாகவி பாரதியார்..
மாகாளி பராசக்தி உருசிய நாட்டினிற்
கடைக்கண் வைத்தாள், அங்கே,
ஆகாவென் றெழுந்ததுபார் யுகப்புரட்சி,
கொடுங்காலன் அலறி வீழ்ந்தான்,
வாகான தோள்புடைத்தார் வானமரர்,
பேய்க ளெல்லாம் வருந்திக் கண்ணீர்
போகாமற் கண்புதைந்து மடிந்தனவாம்,
வையகத்தீர், புதுமை காணீர்!
என்று கவிதை வடித்திருக்கிறார். நம்மால் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றஅசைக்க
முடியா நம்பிக்கையும், தன் இலக்கைநோக்கி இரவு, பகல் பாராமல் உழைக்கும்
மனஉறுதியும், எல்லோருக்கும் எல்லாமும்வேண்டும் என்ற பரந்த மனப்பான்மையும்தான்லெனின் என்ற அந்த வரலாற்று நாயகனுக்குவானத்தை வசப்படுத்த உதவிய பண்புகள். அதேபண்புகளை நாமும் வளர்த்துக்கொண்டால்லெனினைப் போல் ஒரு தேசத்தின் தலையெழுத்தையே மாற்ற முடியா விட்டாலும், குறைந்ததுநம்தலையெழுத்தையாவது மாற்றிக் கொள்ளலாம். நாம் விரும்பும் எந்த வானத்தையும் வசப்படுத்திக்கொள்ளலாம்.
1 comment:
SOORI,NO WORDS TO GREET YOU. KEEP IT UP. BYE SOUNDAR
Post a Comment