- BSNL to start technical varsity, offer engineering and management courses பிஎஸ்என்எல் நிறுவனம் பொறியியல் மற்றும் மேலாண்மை படிப்புகள் அடங்கிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை இன்னும் 8 மாத காலத்திற்குள் தொடங்க உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
- 2002ம் ஆண்டு வெளியிடப்பட்ட வழிகாட்டுதலின்படி கருணை அடிப்படை வேலைக்கான பதவி உருவாக்கம் பின் பற்றப்பட வேண்டும் என BSNL நிர்வாகம் மாநிலங்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. 2002 உத்திரவுப்படி நேரடி நியமன பதவிகளில் 5 சதம் கருணை அடிப்படை பணி பதவி உருவாக்கத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. பதவியை விட விண்ணப்பதாரர்கள் அதிகள் இருந்தால் காத்திருப்போர் பட்டியல் பின் பற்றப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஆயினும் கருணை அடிப்படையில் பணி நியமனம் பெறுவோரின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது எந்த நடைமுறையும் பின் பற்றப்படவில்லை என்றே தோன்றுகிறது.
- ஓராண்டு ஆகியும் இன்னும் பல இடங்களில் JCM தலமட்டக்குழு அமைப்பதிலும் தொடர்ந்து கூட்டங்கள் நடத்துவதிலும் சிக்கல் தொடர்கின்றது. எனவே NFTE சங்கத்துடன் இணைந்து JCM கூட்டங்களை நடத்துவதற்கு நமது BSNLEU மத்திய சங்கம் மாவட்டசங்கங்களை கேட்டுக்கொண்டுள்ளது.இது போலவே NFTE சங்கமும் தனது மாவட்ட சங்கங்களை கேட்டுக்கொண்டுள்ளது.
- 10/06/2013க்கு முன் பணி ஓய்வு பெற்ற தோழர்களுக்கு 78.2 சத IDA இணைப்பு வழங்குவது சம்பந்தமாக எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்க்குமாறு DOT செயலருக்கு அனைத்து சங்கங்களின் அமைப்பு சார்பாக தோழர்.VAN.நம்பூதிரி கடிதம் கொடுத்துள்ளார் . தற்போது செலவின இலாக்காவில் DEPT. OF EXPENDITUREல் ஓய்வு பெற்ற தோழர்களின் 78.2 சத IDA இணைப்பிற்கான கோப்பு ஓய்வெடுத்துக்கொண்டுள்ளது.
- தேசிய கவுன்சில் கூட்டம் 22-04-2014 க்கு பதிலாக 23-04-2014 அன்று நடைபெற உள்ளது .கேடர் பெயர் மாற்றத்திற்கான கமிட்டி 23-04-2014 க்கு பதிலாக 24-04-2014 அன்று நடைபெற உள்ளது .
Tuesday 15 April 2014
செய்தி . . . . . துளிகள் . . .
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment