Sunday 20 April 2014

ஏப்ரல் - 21 பாரதிதாசன் நினைவு நாள் . . .

    சுப்புரத்தினம்  என்ற  தனது பெயரை பாரதியாரைச் சந்தித்தபின் அவருடைய கவியாளுமையில் தன்னைப் பறிகொடுத்து பாரதிதாசனாக மாற்றிக்கொண்டார். இருவருடைய சந்திப்பு எப்போது நிகழ்ந்தது என்பது குறித்து நிறைய ஆய்வு விவாதங்கள் உள்ளன.
              இருப்பினும் பாரதிதாசன் வாழ்வில் நடந்த இருபெரும் முக்கிய நிகழ்வுகளாக அவர் பாரதியாரைச் சந்தித்த நிகழ்வையும், தந்தை பெரியாரைச் சந்தித்ததையும் வரலாற்று நிகழ்வுகளாகக் குறிப்பிடுவார்கள். இந்நிகழ்வுகள் பாவேந்தர் வாழ்வில் பல மாற்றங்களை நிகழ்த்தியவைஎனலாம்.
                   
பாரதியைப் பின்பற்றி அரசியல் விடுதலை. சமுக ஏற்றத்தாழ்வு ஒழிதல் வேண்டிப் பின்னர் சமுகச் சீர்திருத்தம் என்பதை முதன்மையாகவும் கொண்டு பாடல்களை இயற்றினார்அதன்பின்னர் சுயமரியாதை இயக்கத்தின்பால் கொண்ட ஈர்ப்பால் அவரது படைப்புலகம் அதன் வழியாகவே மையங்கொண்டது. தாய்மொழிக்கல்வி. பெண்ணுரிமை. முடப் பழக்கவழக்கம் ஒழிப்பு அனைவருக்கும் கல்வி அனைவரும் சமம் என அவரது கவிதைகள் அமைந்தன.
 1929 குடிஅரசு ஏட்டில் குடும்பக் கட்டுப்பாடு பற்றி இந்தியாவிலேயே முதற்பாடல் எழுதியது.
                1933  
இல் மா.சிங்காரவேலர் தலைமையில் சென்னையில் நடந்த நாத்திகர் மாநாட்டில் நான் ஒரு நிரந்தரமான நாத்திகன் என்று எழுதி கையெழுத்திட்டது.
                 1935
ஸ்ரீ சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலம் தொடக்கம்.
                  1937
புரட்சிக்கவி வெளியீடு.
                  1938
பாரதிதாசனின் முதல் கவிதைத் தொகுதி வெளியீடு.
                   1942
குடும்ப விளக்கு 1. 1944 குடும்ப விளக்கு 2 1948 குடும்ப விளக்கு 3
                   1950
குடும்ப விளக்கு 4. 5 வெளியிடு.
                    1955
புதுவை சட்டமன்றத்தொகுதியில் வெற்றிபென்று அவைத்தலைமை.
                    1959
பாரதிதாசன் நாடகங்கள்
                     1964
இல் ஏப்ரல் 21 இல் இயற்கை எய்துதல்
..
                   எல்லா நிகழ்வுகளையும் தெரிந்துகொள்ள அவரது கவிதைத் தொகுதி நூலில்ஆண்டுவாரியாக அச்சிடப்பெற்றுள்ளது. ஆர்வமும் தேடுதலும் கருதி சிலவற்றை மட்டும் சான்றாகக் கொடுத்துள்ளேன்.
  பாரதிதாசனைத் தேடிப் படிக்கவேண்டும்
ஒருமுறை வாசிக்கவேண்டும்.
 
எனக்கு நிரம்பப் பிடித்தது குடும்ப விளக்கு என்னும் நூல்.
  
என்றைக்கும் அழியாக குடும்பத்தின் நல்ல இல்லறத்தின் மேன்மையை உணர்த்துவது அது. உடலைத் தாண்டி மனதால் வாழ்வது என்கிற உன்னதத்தை வெளிப்படுத்துவது.
                       
சுருக்கமாகச் சொன்னால் பாவேந்தர் ஒரு நீண்ட கடல்.
                     
அதை நதியளவுகூட சுருக்கமுடியாது
.

No comments: