தமிழக மின் வாரியத்தின் நஷ்டம் ரூ.45 ஆயிரம் கோடியி லிருந்து ரூ.75 ஆயிரம் கோடியாக அதிகரித்து விட்டதாகவும், இதை சமாளிக்க, மின் கட்டணத்தை 15 சதவீதம் உயர்த்த ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.மத்திய அரசின் மின் கொள்கை தமிழகத்தில் ஆளும் அரசுகளின் குளறுபடிகள் போன்ற வற்றால் மின் வாரியத்தின் இழ ப்பு ரூ.45 ஆயிரம் கோடியிலிரு ந்து ரூ.75 ஆயிரம் கோடியாக உயர்ந்திருப்பது தெரியவந்துள்ளது. நிலைமையை சரிசெய்ய, மின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்கு மின் வாரியம் தள்ளப்பட்டுள்ளதாக உயர் அதிகாரிகள் கூறுகின்ற னர்.இதற்கிடையே, ஆண்டுக் கணக்கையும் மின் கட்டணம் குறித்த மறுஆய்வு அறிக்கையையும் தாக்கல் செய்யுமாறு மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் உத்தரவிட்டுள்ளது.இந்த ஆண்டு 15 சதவீதம் அளவுக்கு மின் கட்டணத்தை உயர்த்தினால்தான் ஊழியர்களுக்கு சம்பளமேகொடுக்கமுடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும், எனவே, மின் கட்டணத்தை மாற்றி அமைப்பது குறித்த அறிக்கையை மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தில் அதிகாரிகள் விரைவில் தாக்கல் செய்வார்கள் எனவும் கூறப்படுகிறது.
சமீபகாலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் நிலக்கரி மற்றும் நாப்தா விலை கணிசமாக உயர்ந்துவிட்டது. இதனால் புதிய மின் திட்டங்களுக்கு அதிக நிதி செலவிட வேண்டியுள்ளது. வெளிநாட்டிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்வதற்கான போக்குவரத்து செலவும் அதிகரித் துள்ளது. இதுபோன்ற காரணங்களாலும் நஷ்டம் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்?
No comments:
Post a Comment