Monday 28 April 2014

தியாகத்திற்கு அஞ்சலி...

ஸ்ரீநகர்காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் சென்னையில் சேர்ந்த ராணுவ அதிகாரி உயிரிழந்தார். காஷ்மீர் மாநிலம், சோபியான் மாவட்டம் கரேவா மலினோ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாநில போலீசாரும், அசாம் ஆயுத படையினரும் நேற்று முன்தினம் இரவில் அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தீவிரவாதி தாக்கியதில் ராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜனும் ராணுவ வீரர் ஒருவரும் உயிரிழந்தனர்.
தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் பலியான ராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜன் சென்னையைச் சேர்ந்தவர் ஆவார். இவரது தந்தை பெயர் வரதராஜன். ஓய்வுபெற்ற வங்கி மேலாளரான வரதராஜன் கிழக்கு தாம்பரம் பேராசிரியர் காலனியில்மனைவிகீதாவுடன்வசித்துவருகிறார்.இந்த தம்பதியின் ஒரே மகன் முகுந்த். ராணுவ மேஜரான முகுந்திற்கு கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவரது மனைவி பெயர் இந்து. இவர்களுக்கு 3 வயதானஅர்ஷிதாஎன்றமகள்இருக்கிறாள். பெங்களூரில்ராணுவகுடியிருப்பில்வசித்துவருகின்றனர்.முகுந்தின்சொந்தஊர்ஆவடிஅருகேயுள்ளபருத்திப்பட்டுகிராமம்.முகுந்துக்குசுவேதா,நித்யாஎன்ற இருசகோதரிகள்உள்ளனர்.அவர்களுக்கும்திருமணம்ஆகிவிட்டது.
ராணுவ மேஜர் முகுந்த் கிழக்கு தாம்பரத்தில் உள்ள சங்கரா கல்லூரியில் பி.காம் படித்தார். பின்னர் சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் ஊடக துறையில் பி.ஜி.டிப்ளமோ படித்தார். அதன்பிறகு சென்னையில் உள்ள ஆபீசர்ஸ் பயிற்சி அகாடமியில் சேர்ந்து ராணுவ மேஜராக 44வது ராஷ்டிரிய ரைபிள்ஸ் பிரிவில் சேர்ந்தார். 2012ல் ஐக்கிய நாடுகள் சபை அமைதிப்படையில் லெபனானில் பணியாற்றினார். அதன் பின்னர் காஷ்மீரில் ராணுவ மேஜராக பணியாற்றிவந்தார்.தீவிரவாதிகள் தாக்குதலில் மேஜர் முகுந்த் பலியான சம்பவம், அவரது தந்தை வசிக்கும் கிழக்கு தாம்பரம் பேராசிரியர் காலனியில்பெரும்சோகத்தைஏற்படுத்திஉள்ளது.
எனக்கு மகனாக மட்டும் இல்லாமல் தந்தையாக, நண்பனாக இருந்தவன் என் மேல் அன்பு கொண்டவன் நாட்டிற்காக உயிரை தியாகம் செய்துள்ளான். அவன் புண்ணியம் செய்தவன்" என்று கூறிய தந்தை  வரதராஜன் கதறி அழுதார்.
தியாகத்திற்கு அஞ்சலி...மதம் பாராது ... இனம் பாராது காத்திட்ட நாட்டை...மதத்தால் துண்டாட அனுமதியோம் !

No comments: