Friday 4 April 2014

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் பிரசாரம் . . .

மதுரை பாராளுமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் விக்ரமன் அனுப்பானடி பகுதியில் பொதுமக்களை சந்தித்து ஓட்டு கேட்டு பிரசாரம் செய்தார்.
பிரசாரம்
இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மதச்சார்பற்ற ஜனதா தளம், அருந்தமிழர் விடுதலை இயக்கம் ஆகிய கட்சிகள் சார்பில் மதுரை நாடாளுமன்றத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் பா.விக்ரமன் அனுப்பானடி பேருந்து நிலையம் அருகே பிரசாரம் தொடங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு இரா.அண்ணாதுரை எம்.எல்.. தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் முன்னாள் எம்.எல்.. என்.நன்மாறன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தொகுதி பொறுப்பாளர் சி.தாமஸ் ஆகியோர் பேசினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் .லாசர் எம்.எல்.. துவக்க உரையாற்வினார்.நிகழ்ச்சியில், கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் இரா.ஜோதிராம், தொகுதி பொறுப்பாளர் .பிச்சைமதி, மாவட்ட செயற்குழு உறுப்நினர்கள் பா.மாரிசாமி, இரா.விஜயராஜன், பிச்சை, பி.ராதா, மா.கணேசன், மா.செல்லம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அனுப்பானடியில் கட்சியின் மூத்தத்தோழரான ஆதிமூலம் வரவேற்றார்.
வீதி வீதியாக சென்றார்
அனுப்பானடி பஸ் நிலையத்தில் அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து வாக்கு சேகரிப்பை துவக்கிய பா.விக்ரமன் அங்கிருந்து வீதி வீதியாகச் சென்று வாக்குசேகரித்தார். பல இடங்களில் தாரை தப்பட்டம் முழங்க வேட்பாளருக்கு வரவேற்பளிக்கப்பட்டது. சூசை மைக்கேல் தெரு, நடுத்தெரு, அய்யனார் கோவில் தெரு, சுந்தர்ராஜ பிள்ளை சந்து, வடக்கு தெரு, மேல அனுப்பானடி, காமாட்சி அம்மன் கோவில் தெரு, தமிழன் தெரு, பகலவன் நகர், பூக்கார சந்து, டீச்சர்ஸ் காலணி, மருதுபாண்டிய நகர், செல்வ விநாயகர் தெரு, கீழ்மதுரை காலணி, பாலரெங்காபுரம், சிசி ரோடு, சின்ன கண்மாய், காமராஜபுரம் மார்க்கெட், .வி.டி. பந்தல், கிருஷ்ணாபுரம் குறுக்கு உள்ளிட்ட பல இடங்களில் பெண்கள் ஆரத்தி எடுத்தும் பூரணகும்ப மரியாதை அளித்தும் வரவேற்பளித்தனர். சீனிவாசப் பெருமாள் கோவில், மார்க்கெட் சந்தைபேட்டை, மதிச்சியம், ஆழ்வார்புரம் மூங்கில்கடை இறக்கம், செல்லூர் மார்க்கெட் ஆகிய பகுதிகளின் வழியாக வாக்குசேகரிப்பு நிறைவடைந்தது. சி.பி.. பகுதிக்குழுச் செயலாளர் ராமலிங்கம் உள்ளிட்ட பலர் பிரசாரத்தில் கலந்து கொண்டனர்.
அனுப்பானடி பேருந்து நிலையில் பிரசாரத்தைத் துவக்கி அவர் பேசியது: இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் வகையிலும், புதிய தலைமுறையைச் சார்ந்தவர்களைக் கணக்கில் கொண்டும் கனரக இயந்திரத் தொழிற்சாலைகள், ரயில் பெட்டி தயாரிப்பு, தேசிய அனல்மின் கழகம் மூலம் 1000 மெகாவாட் மின்உற்பத்தி நிலையம் ஆகியவற்றைத் துவக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன்.மீனாட்சியம்மன் கோயிலுக்கு வருகைதரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் சுற்றுலாத் திட்டங்களை உருவாக்குவேன். மதுரை- கொடைக்கானல், மதுரை - மூணாறு, மதுரை - ராமேஸ்வரம் தொடர் சுற்றுலாத் திட்டத்தை உருவாக்கிடுவேன் என பா.விக்ரமன் உரை நிகழ்த்தினார்.

No comments: